Cinema

சென்னை விமான நிலையத்தில் முதல் முறையாக நடைபெறும் திரைப்பட விழா!

சென்னை விமான நிலையத்தில் இதுவரை படப்பிடிப்புகளுக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டுள்ளது என்பதும் எந்த ஒரு திரைப்படத்தின் விழாவும் இதுவரை அங்கு நடந்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் முதல்முறையாக விமானம் குறித்த திரைப்படம் என்பதால் விமான நிலையத்தில் ஒரு திரைப்படத்தின் ஆடியோ விழாவை நடத்த விமான நிலைய அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

பிரபல விமான நிறுவனர் ஜிஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் சூரரைப்போற்று. சூர்யா நடிப்பில் சுதா கொங்காரா இயக்கியுள்ள இந்தப் படத்தின் ஆடியோ விழா வரும் 13ம் தேதி சென்னை விமான நிலையத்தில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்

இதற்காக விமான நிலைய உயர் அதிகாரிகளிடம் கலந்து பேசிய போது விமான நிலைய அதிகாரிகள் இந்த விழாவிற்கு அனுமதி கொடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த விழாவில் தமிழ் திரையுலகின் முக்கிய பிரபலங்கள் மற்றும் தெலுங்கு திரையுலகில் ஒரு சில பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் இந்த விழாவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது

Leave a Comment