காதலர் தினத்தில் சூர்யாவின் ‘சூரரை போற்று?

Photo of author

By CineDesk

காதலர் தினத்தில் சூர்யாவின் ‘சூரரை போற்று?

CineDesk

Updated on:

சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படம் விஜய்யின் மாஸ்டர் வெளியாகும் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கான போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இடம்பெற்ற ’மாறா தீம்’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. சூர்யா பாடிய இந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாடல் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தில் வெளியாகும் என இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சூர்யாவின் ரசிகர்கள் இந்த பாடலையும் வரவேற்க தயாராகி வருகின்றனர். காதலர் தினத்தில் காதல் ரசம் சொட்டச் சொட்ட ஒரு ரொமான்ஸ் பாடலை படக்குழுவினர் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

சுதா கொங்கரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் நடித்துள்ளனர். நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகின்றது.