உங்க உயிரோட விலை, அரை கப் டீக்கு சமம்! பட்டையை கிளப்பும் சூரரை போற்று டீசர் இதோ!

Photo of author

By Kowsalya

உங்க உயிரோட விலை, அரை கப் டீக்கு சமம்! பட்டையை கிளப்பும் சூரரை போற்று டீசர் இதோ!

Kowsalya

Updated on:

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரைப்போற்று நவம்பர் 12 தேதி OTT-ல் வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

2டி நிறுவனம் தயாரித்து சுதா கொங்கரா இயக்கி ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் சூரியா மற்றும் அபர்ணா பாலமுரளி, கருணாகரன் ஆகியோர் நடித்துள்ள சூரரைப்போற்று திரைப்படம் விரைவில் OTT யில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் சூரரைப்போற்று திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதமே வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக 7 மாதங்களாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. திரை அரங்குகள் எதுவும் திறக்கப்படாததால் OTT தளத்தில் திரைப்படத்தை வெளியிடலாம் என படக்குழு முடிவு செய்திருந்தது. விமானப்படை தரப்பில் இருந்து தடையில்லா சான்று கிடைக்க தாமதம் ஆனதால் OTT யில் வெளியிடுவதும் தாமதமாகி இருந்தது.

இந்நிலையில் விமானப்படையில் இருந்து தடையில்லா சான்று கிடைத்துவிட்டதால் நவம்பர் 12 அன்று ஓட்டி அடித்தளத்தில் வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருக்கிறது.

இந்நிலையில் சூரரை போற்று டீசர் வெளிவந்து 3 மணி நேரம் ஆகிய நிலையில் 1.5 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.