சுதா கொங்கரா தற்பொது இயக்கவுள்ள படத்தில் சூர்யா இல்லை! அவருக்கு பதில் இவர்தான் நடிக்க உள்ளதாக தகவல்!

Photo of author

By Parthipan K

சுதா கொங்கரா தற்பொது இயக்கவுள்ள படத்தில் சூர்யா இல்லை! அவருக்கு பதில் இவர்தான் நடிக்க உள்ளதாக தகவல்!

இயக்குனர்களில் பிரபலமாக இருப்பவர்களின் ஒருவர்  சுதா கொங்கரா. இவர் எண்ணற்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார். மேலும் இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான சூரரை போற்று திரைப்படத்திற்கு இந்தியளவில் வரவேற்ப்பு கிடைத்தது. என்றாலும் அதனை தொடர்ந்து மீண்டும் சுதா கொங்கரா சூரரை போற்று திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து வருகிறார். அப்படத்தில் நடிகர் அக்‌ஷய் குமார் ஹீரோவாக நடித்து வருகிறார்.

மேலும் இதற்கிடையே கே.ஜி.எப் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த ஹோம்பலே ஃபில்ம் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்படத்தில் நடிக்கும் கதாநாயகன் குறித்து எந்தஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை.

நடிகர் சூர்யா  சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தை அந்நிறுவனம் தயாரிக்க உள்ளது என கூறப்படுகிறது. மேலும் தற்போது ஹோம்பலே ஃபில்ம் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கும் திரைப்படத்தில் நடிகர் சிம்பு தான் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பத்து தல உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பின்பே சிம்பு இப்படத்தில் நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. சிம்பு நடிப்பில் இந்த படத்தை இயக்கிய பிறகு தான் சுதா கொங்கரா சூர்யா நடிப்பில் அடுத்த படத்தை இயக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.