சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நேற்று சினிமா உலகின் மிக உயரிய விருதான தாதா சாகிப் பால்கே விருது வழங்கப்பட்டது.
ரஜினிகாந்த் பிறப்பில் மராட்டியர், தமிழ் சினிமாவில் நுழைந்த பிறகு சிவாஜி ராவ் என்னும் தன் பெயரை ரஜினிகாந்த் என மாற்றிக்கொண்டார்.
ரஜினிகாந்த் ஒவ்வொரு மேடையிலும் ‘என்னை வாழ வைத்த தெய்வங்கள்’ என தமிழ் மக்களை என்றுமே நினைவு கூறுவார்.
குழந்தையிலிருந்து பெரியவர்கள் வரை ரஜினிக்கு ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
எனினும் ரஜினியை சுற்றி எப்போதும் ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டே தான் இருக்கும்.
நேற்று ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் ஹூட் என்னும் செயலியை தொடங்கி வைத்தார். மக்கள் அந்த செயலியில் தங்கள் கருத்துக்களை சொந்த குரலில் பதிவிடலாம்.
இது எழுத படிக்க தெரியாதவர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் எனக் கூறினார்.
மேலும் தன் தந்தை தனக்கு தகவல்களை பேசி தான் அனுப்புவார், அவருக்கு தமிழ் பேச தெரிந்தாலும் அந்த அளவுக்கு சரியாக எழுத தெரியாது எனக்கு கூறினார்.
இதை தற்போது சிலர் மிகப்பெரிய பிரச்சனையாக மாற்றி வருகின்றனர்.
சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, கீர்த்திசுரேஷ் நடித்த அண்ணாத்தே திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.