கொழும்புவில் நடைபெற்ற முதல் டி20 போட்டியை 28 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை தென் ஆப்பிரிக்கா வீழ்த்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்கா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. மார்கிராம் 48 ரன்னும், ஹென்ரிக்ஸ் 38 ரன்னும், டி காக் 36 ரன்னும் எடுத்தனர்.
பின்னர் 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. அந்த அணியால் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது இதன் மூலம் இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா 28 ரன் கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இலங்கை அணியில் அதிகபட்சமாக தினேஷ் சண்டிமால் 66 ரன்கள் எடுத்தார். சமிகா கருணரத்னே 22 ரன்னும் எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 1-0 என சமனிலை பெற்றுள்ளது. ஆட்ட நாயகன் விருது மார்கிராமுக்கு வழங்கப்பட்டது. இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.