ஆட்டத்தைக் கெடுத்த மழை… டக்வொர்த் லூயிஸ் விதிப்படி பாகிஸ்தான் வெற்றி!
தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய சூப்பர் 12 லீக் போட்டி இன்று நடைபெற்றது.
இன்று பாகிஸ்தான் அணி சூப்பர் 12 தொடரில் தங்கள் நான்காவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் ஆரம்பத்தில் விக்கெட்களை இழந்து தடுமாறியது. முதல் 10 ஓவர்க்ளில் 60 ரன்கள் சேர்த்து 4 விக்கெட்களை இழந்திருந்தது.
அதன் பின்னர் அந்த அணியின் இப்திகார் அகமது, முகமது நவாஸ் மற்றும் ஷதாப் கான் ஆகியோர் சிறப்பாக விளையாடி இறுதியில் 185 ரன்கள் என்ற இலக்கு நோக்கி நகர்த்தினர். இப்திகார் அகமது 35 பந்துகளில் 51 ரன்களும், ஷதாப் கான் 22 பந்துகளில் 52 ரன்களும் அதிரடியாக சேர்த்து கலக்கினர். இதனால் 150 ரன்கள் கூட வாரது என்ற நிலையில் இருந்து 185 என்ற இலக்கை நிர்ணயிக்க முடிந்தது.
இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணி விளையாடிய போது 9 ஓவர்களில் 64 ரன்கள் சேர்த்து 4 விக்கெட்களை இழந்திருந்த போது, மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் போட்டி மீண்டும் தொடங்கப்பட்ட போது 14 ஓவர்களில் 142 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 108 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் 33 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்கா அணிக்கும் மழைக்கும் எப்போதுமே ஒத்துப் போகாது. மழை காரணமாக பல போட்டிகளை தென் ஆப்பிரிக்கா இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.