கோல்டன் விசாவைப் பெறப்போகும் தென்னிந்திய நடிகர்கள்! ஐக்கிய அரபு அமீரகம் கௌரவம்!

Photo of author

By Parthipan K

கோல்டன் விசாவைப் பெறப்போகும் தென்னிந்திய நடிகர்கள்! ஐக்கிய அரபு அமீரகம் கௌரவம்!

Parthipan K

South indian actors receiving golden visa from UAE

கோல்டன் விசாவைப் பெறப்போகும் தென்னிந்திய நடிகர்கள்! ஐக்கிய அரபு அமீரகம் கௌரவம்!

ஐக்கிய அரபு அமீரகம் தங்கள் நாட்டில் கோல்டன் விசா என்ற விசாவை பிரபலமான நபர்களுக்கும் தங்கள் நாட்டிற்கு உதவுபவர்களுக்கும் வழங்குகிறது.இந்த விசாவின் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த விசாவனது பத்தாண்டு காலங்களுக்கு செல்லுபடியாகும்.மேலும் இந்த கோல்டன் விசாவை வைத்திருப்பவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியுரிமை வைத்திருப்பவர்களுக்கு சமமாகக் கருதப்படுவர்.

கோல்டன் விசாவை ஐக்கிய அரபு அமீரகம் தற்போது தென்னிந்திய நடிகர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.இந்த விசாவை மலையாள நடிகர்கள் மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோருக்கு வழங்கப்போவதாக  அமீரகம் தெரிவித்துள்ளது.இந்த கோல்டன் விசாவானது மலையாள நடிகர்களுக்கு வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.இந்த விசாவை இவர்களுக்கு வழங்கி கௌரவித்துள்ளது அமீரக அரசு.

இதற்கு முன்னர் இந்தியாவில் இந்த கோல்டன் விசாவை பாலிவுட் நடிகர் ஷாரூக் கான்,சஞ்சய் தத் ஆகியோர் பெற்றுள்ளனர்.மேலும் பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவும் இந்த கோல்டன் விசாவை பெற்றுள்ளார்.இவர்கள் மட்டுமில்லாமல் தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஆயுர்வேத மருத்துவரான நஸ்ரின் பேகம் என்பவரும் இந்த விசாவைப் பெற்றுள்ளார்.இவர் சமீபத்தில்தான் இந்த விசாவை அமீரக அரசிடம் இருந்து பெற்றார்.

இந்நிலையில் மலையாள நடிகர் மம்மூட்டி இந்த கோல்டன் விசாவைப் பெறுவதற்கு ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார்.இவர் விமானம் மூலம் சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.நடிகர் மம்மூட்டியும் மோகன்லாலும் இந்த விசாவைப் பெறுவதில் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.மேலும் இவர்கள் இருவரும் அதனைப் பெருமையாகக் கருதுவதாகவும் தெரிவித்துள்ளனர்.இந்தியாவில் சிலருக்கு மட்டுமே கிடைத்த பெருமை இப்போது மலையாள நடிகர்களான மம்மூட்டி மற்றும் மோகன்லாலுக்கு கிடைத்திருப்பது மலையாள சினிமா உலகிற்கு பெரிய கவுரவமாக பார்க்கப்படுகிறது.