ஆப்பிரிக்க காரர்கள் போல இருக்கும் தென்னிந்தியர்கள் மக்களை பிரிக்க முயலும் காங்கிரஸ்!! பாஜக கடும் எதிர்ப்பு!!

Photo of author

By Anitha

ஆப்பிரிக்க காரர்கள் போல இருக்கும் தென்னிந்தியர்கள் மக்களை பிரிக்க முயலும் காங்கிரஸ்!! பாஜக கடும் எதிர்ப்பு!!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அதிகாரப்பூர்வ ஆலோசகரும், காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்ட்டில் வாழும் இந்தியர்கள் பிரிவின் தலைவருமாக இருந்த சாம் பிட்ரோடா இந்தியர்கள் குறித்து நிறத்தை குறை கூறி பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவர் இந்தியர்களின் நிறத்தை குறை கூறி பேசுவது போல வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் இந்தியாவில் வாழும் மக்கள் கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், அரேபியர்கள் போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்கள் போலவும், ஆனால் தெற்கே உள்ளவர்கள் மட்டும் ஆப்பிரிக்கர்களைப் போலவும் தோற்றம் அளிப்பதாக கூறிய கருத்தானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல்வேறு நிறத்தில் இருப்பவர்களை ஒன்றாக சேர்த்த பெருமை காங்கிரஸ் சாரும் என கூறி இருந்தாலும் அவரது பேச்சு நிறத்தை குறை கூறுவது போல உள்ளதாக பிரதமர் மோடி சாடியுள்ளார்.

ஏற்கனவே இவர் சொத்துரிமை குறித்து பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய வகையில், தற்பொழுது நிறத்தை குறை கூறி பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இவரது இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு பல்வேறு தரப்பில் கிளம்பியுள்ளது. மேலும் பிரதமர் மோடி மக்களின் தோல் நிறத்தை வைத்து அவர்களை மதிப்பிடுவது பெரும் கோபத்தை ஏற்படுத்துவதாகவும் இந்த கருத்தானது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் எனவும் சாடியுள்ளார்.

தற்பொழுது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் சாம் பிட்ரோடாவின் நிறத்தை குறை கூறி வெளியிட்டுள்ள வீடியோ தேர்தலிலும் பெரும் பின்னடைவை காங்கிரஸிற்கு ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.