தென் கொரியாவின் “செயற்கை சூரியன்” 20 வினாடிகளுக்கு 100 மில்லியன் டிகிரியை அடைந்து உலக சாதனை!

Photo of author

By Kowsalya

தென் கொரியாவின் செயற்கை சூரியனை உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதில் தென் கொரியா புதிய உலக சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது.
இருபது வினாடிகளுக்கு 100 மில்லியன் டிகிரி செல்சியசுக்கு மேலே இந்த செயற்கை சூரியன் சென்றடையும் என்பதை நிரூபித்துள்ளது.

மேலும் நமது சூரியன் 15 மில்லியன் டிகிரி செல்சியஸில் தான் எரிகிறது என்பதை எளிதாக பரிசோதனை செய்து உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் தென் கொரியாவின் இந்த செயற்கை சூரியன் நமது சூரியனை விட 6.6 மடங்கு அதிகமான வெப்ப நிலையை கொண்டுள்ளது என்பதை தெரிவித்துள்ளது.

தென்கொரியாவின் இந்த இயற்கை சூரியன் 2018-ஆம் ஆண்டில் இதே வெப்ப நிலையை அடைந்துள்ளது. ஆனால் ஒன்றரை வினாடிகளுக்கு மட்டுமே நீடித்துள்ளது. அதேபோல் 2019 ஆம் ஆண்டில் 8 வினாடிகளுக்கு அந்த வெப்ப நிலையை அடைந்துள்ளது. இது மிகப் பெரிய சாதனை என்று சொல்லப்படுகிறது ஏனெனில் நீண்ட காலமாக பிளாஸ்மாவை சூடாக தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் இந்த புதிய சாதனை நவம்பர் 24 2020 இல் அடையப்பட்ட தாகச் சொல்லப்படுகிறது.

அதே போல் 100 மில்லியன் டிகிரி பிளாஸ்மாவின் இந்த செயல்பாடுகளுக்கு தேவையான தொழில்நுட்பங்கள் இணைவு ஆற்றல்(Fusion Energy) அடைவது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது என்று ஒரு Korea Institute of Fusion Energy மையத்தின் இயக்குனர் Si-Woo அறிக்கையில் தெரிவித்துள்ளார்.மேலும் உயர் வெப்பநிலை பிளாஸ்மாவை 20 வினாடிகள் பராமரிப்பதே KSTAR- இன் வெற்றி. நீண்ட உயர் செயல்திறன் கொண்ட பிளாஸ்மா செயல்பாட்டிற்கு ஆன தொழில்நுட்பங்களை பாதுகாப்பதற்கான பந்தயத்தில் ஒரு முக்கிய திருப்பு முனையாக இந்த சாதனை அமையும் என்பதை அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தை எரியும் நேரத்தை அதிகரிப்பது மற்றும் இணைவு உலை ஒன்றில் வேலை செய்வதே நோக்கமாகக் கொண்டுள்ளது. இது உற்பத்தி செய்வதை விட குறைந்த ஆற்றலை எடுக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும் IFLScience அறிக்கையின்படி 2025ல் KFE 300 வினாடிகளை குறி வைக்கிறது என்று சொல்லப்படுகிறது.