காதலியை கரம் பிடித்தார் தெலுங்கின் பிரபல நடிகர்!

Photo of author

By Parthipan K

காதலியை கரம் பிடித்தார் தெலுங்கின் பிரபல நடிகர்!

Parthipan K

Nithin marriage

நித்தீன் என்று அழைக்கப்படும் நிதின் ரெட்டி,தெலுங்கில் பிரபல முன்னணி நடிகரும் தயாரிப்பாளரும் ஆவார்.

இவரது  தந்தை  சுதாகர் ரெட்டியும், தெலுங்கு பட தயாரிப்பாளர் ஆவார். 2002ஆம் ஆண்டு வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் நிதின் கதாநாயகனாக அறிமுகமானார். இதற்காக அவர், சிறந்த ஆண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார்.

முன்னாள் இந்திய மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் எம்.வெங்கையா நாயுடு 2015 இல் தெலுங்கானா மாநிலத்திற்கான 9 நபர்களுடன் ஸ்வச் பாரத் பிரச்சாரத்தின் பிராண்ட் தூதராக பட்டியலிடப்பட்டார். 

 நடிகர் நிதினுக்கும் அவரது காதலி ஷாலினிக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில்,ஹைதராபாத்தில் உள்ள தாஸ் ஃபலாக்நுமா என்ற ஹோட்டலில், நிதின்-ஷாலினி இருவருடைய திருமணமும், இன்று கோலாகலமாக நடைபெற்றது. குறைந்த எண்ணிக்கையிலான நபர்களே  திருமணத்தில் கலந்து கொண்டனர்.

 இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள தாஸ் ஃபலாக்நுமா பேலஸ் ஹோட்டலில் நிதின் - ஷாலினி திருமணம் நடைபெற்றது.

இவர்களது திருமணத்திற்கு அனைத்து  திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். சமூக வலைதளங்கள் மூலம் நிதின் உடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை பகிர்கின்றனர்.