தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! பெங்களூரில் இருந்து இந்த ஊர் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம்!
கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து இடங்களுக்கமான போக்குவரத்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது.அதனை தொடரந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்தது அதனால் மீண்டும் போக்குவரத்துசேவைகள் அனைத்தும் படிப்படியாக தொடங்கியது.ஆனால் பேருந்துகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதால் மக்கள் பேருந்துகளில் பயணம் செய்வதை தவிர்த்து ரயில் பயணத்தையே விரும்பினார்கள்.
இந்நிலையில் பண்டிகை நாட்கள் என்றாலே அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு கூடுதல் ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம் தான்.கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையின் பொழுது சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் சிறப்பு ரயில்கள் மற்றும் வாராந்திர சிறப்பு ரயில்கள் ரயில்வே அமைச்சகத்தின் சார்பில் இயக்கப்படுகிறது.
மேலும் கடந்த ஐனவரி மாதம் பொங்கல் பண்டிகையின் பொழுது நான்கு நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது அதனால் வெளியூர்களில் இருக்கும் மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக சென்னையில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்பட்டது.
இந்நிலையில் தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் வேலூர் மாவட்டம்,கட்பாடி வழியாக பெங்களூரு சாலிமார் வரையிலான ஒரு வழிபாதை சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.இந்நிலையில் வரும் ஐந்தாம் தேதி காலை 10.15 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயில் கிருஷ்ணராஜபுரம், காட்பாடி, ரேணிகுண்டா, ஓங்கோல், விஜயவாடா, ராஜமுந்திரி, விசாகப்பட்டினம், விஜயநகரம், புவனேசுவரம், ஸ்ரீகாகுளம் சாலை, கட்டாக், கராக்பூர் வழியாக பிப்ரவரி 6 ஆம் தேதி மாலை 6.45 மணிக்கு சாலிமார் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.