தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! எக்ஸ்பிரஸ் ரெயில்களில் நேரம் மாற்றம்!
எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரெயில்வே துறை வெளியிட்ட அறிவிப்பில் முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது. திருப்பதியில்லிருந்து காட்பாடி செல்லும் இரயில் (வண்டி எண்:07581) காலை 10.55 மணிக்கு இயக்கப்படும். மேலும் காட்பாடியில்லிருந்து திருப்பதி செல்லும் இரயில் (வண்டி எண்:07582) ஆனது இரவு 9:55 மணிக்கு புறப்படும்.
மேலும் முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற 11 தேதியில் இருந்து இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் விழுப்புரததில் இருந்து மயிலாடுதுறை செல்லும் ரயில் (வண்டி எண்:06691) மதியம் 2.25 மணிக்கு இயக்கப்படும் மற்றும் மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரம் செல்லும் இரயில் காலை 6 மணிக்கு புறப்படும் என ரெயில்வே அறிவித்துள்ளது.
மேலும் முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் பதினொன்னாம் தேதியில் இருந்து மீண்டும் இயக்கப்படும் என ரயில்வே கூறியுள்ளது. விழுப்புரத்தில்லிருந்து புதுச்சேரி செல்லும் இரயில்கள் அதிகாலை 5.30 மணிக்கும் ,மாலை 5.50 மணிக்கு இயக்கப்படும் என தெரிவித்துள்ளது. புதுச்சேரியில்லிருந்து விழுப்புரம் செல்லும் இரயில் காலை 8.10 மணிக்கும், இரவு 7.45 மணிக்கு புறப்படும் மற்றும் மின்சார ரெயில் பதினொன்னாம் தேதியில்லிருந்து மீண்டும் இயக்கப்படும் எனவும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.