தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் ரயில் சேவை!

0
116
southern-railway-announced-train-service-to-specific-destinations-only
southern-railway-announced-train-service-to-specific-destinations-only

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் ரயில் சேவை!

தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் திருச்சி ரயில் நிலையங்கள் மற்றும் விழுப்புரம் ரயில் நிலையம் இடையே பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றது.அதனால் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.வண்டி எண் 16111 திருப்பதியிலிருந்து பாண்டிச்சேரி இடையே அதிகாலை 4.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் இன்று மற்றும் வருகின்ற 19,20,21ஆகிய தேதிகளில் விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றது.

மேலும் இந்த ரயில் விக்கிரவாண்டி வரை மட்டுமே இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வண்டி எண் 16112 புதுச்சேரி திருப்பதி இடையே மதியம் 2.25மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் இன்று மற்றும் வருகிற 19,20,21 போன்ற தேதிகளில் புதுச்சேரி மற்றும் விக்கிரவாண்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றது.மேலும் இந்த ரயில் புதுச்சேரி வரை மட்டுமே இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வண்டி எண் 06725  மேல்மருவத்தூர்ல்லிருந்து விழுப்புரம் இடையே பகல் 11.30 மணிக்கு இயக்கப்படும் மின்சாரம் ரயில் இன்று மற்றும் வருகிற 19,20,21 தேதிகளில் விக்கிரவாண்டி மற்றும் விழுப்புரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றது.இந்த ரயில் சேவையானது விக்கிரவாண்டி வரை மட்டுமே இயக்கப்படும்.

வண்டி எண் 06726 விழுப்புரத்திலிருந்து மேல்மருவத்தூர் இடையே மதியம் 1.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் இன்று மற்றும் வருகிற 19.20,21 ஆகிய தேதிகளில் விழுப்புரம் மற்றும் விக்கிரவாண்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றது.மேலும் இந்த ரயிலானது விழுப்புரம் வரை மட்டுமே இயக்கப்படும்.மேலும் இது போன்று மயிலாடுதுறை ,விழுப்புரம் மற்றும் விழுப்புரம் ,மயிலாடுதுறை செல்லும் ரயில்களிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K