வருகின்ற செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
கடந்த ஜூன் மாதம் முதல் நாட்டில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்ய தொடங்கியது, அதன் பின்னர் நாளுக்கு நாள் மழை அதிகாகமாக பெய்து வருகிறது. தென் தமிழகத்தில் 13 % மேலாக மழை பெய்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகின்றது.
மேலும் வடமாநிலங்களை பொறுத்தவரை மழைக் குறைந்துள்ளது, மத்திய இந்திய பகுதியில் 3% மழை குறைந்து தென்மேற்கு பருவமழை பெய்ததாக கூறியுள்ளது. மேலும், வடகிழக்கு மாநிலங்களில் 12 சதவீதம் கூடுதலாக மழைப்பொழிவு இருந்ததாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.