லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையின் அதிரடி சோதனை! கையை விரித்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிர்ச்சியில் திமுக!

Photo of author

By Sakthi

திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது கண் வைத்து அவர்கள் செய்த ஊழல்களை தூசி தட்ட ஆரம்பித்தது. அதற்கு முதலில் பலியானவர் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர்.இந்த நிலையில், அதன் அடுத்த கட்டமாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்களின் இல்லத்தில் இன்று காலை 6 மணி முதல் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் அதிரடி சோதனை செய்து வந்தார்கள். அதோடு அவருக்கு நெருக்கமாக இருந்தவர்கள் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பங்குதாரர்கள் என்று அனைவரின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. ஒட்டுமொத்தமாக 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டது என்று சொல்லப்படுகிறது.

இந்த சோதனை ஆரம்பித்த அந்த நொடியிலிருந்து எஸ் பி வேலுமணியின் இல்லத்திற்கு முன்பாக அதிமுகவினர் ஒன்றுகூடி திமுகவிற்கு எதிராக கோஷங்கள் எழுப்ப தொடங்கிவிட்டார்கள்.அதோடு முன்னாள் அமைச்சர் வேலுமணியுடன் குற்றம் சாட்டப்பட்ட கேசிபி நிறுவனம் உள்ளிட்ட பல பகுதிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் அதிரடி சோதனை செய்து வந்தார்கள்.இந்த சூழ்நிலையில், கோவை மதுக்கரையில் இருக்கின்ற எஸ் பி வேலுமணி அவர்களின் மைத்துனர் சண்முகராஜா இல்லத்தில் நடைபெற்று வந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நிறைவு பெற்றது.

இந்த சோதனையில் எந்தவிதமான ஆவணங்களும் கிடைக்கவில்லை என்று எழுதி கொடுத்துவிட்டு லஞ்ச ஒழிப்புத்துறையினர் கிளம்பி சென்று விட்டார்கள். முன்னதாக அதிமுக வின் முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடாமல் பொதுமக்கள் நலன் காக்கும் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று திமுகவிற்கு அதிமுக தலைமை அறிவுறுத்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.