தமிழக அரசு எடுத்த முடிவால் நிம்மதி பெருமூச்சி விட்ட முன்னாள் அமைச்சர்!

0
126

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு எதிரான புகார்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால் அரப்போர் இயக்கம் மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்குகளை முடித்து வைத்து விடலாம் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியிருக்கிறது.

சென்ற அதிமுக ஆட்சிக்காலத்தில் சென்னை, கோயமுத்தூர் உள்ளிட்ட மாநகராட்சிகளில் பல பணிகளுக்கு டெண்டர் வாங்கியதில் முறைகேடுகள் நடந்தது தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணி எதிராக வழக்கு பதிவு செய்ய தெரிவித்தும் அரப்போர் இயக்கம் சார்பாகவும், திமுக சார்பாகவும், உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன.இந்த வழக்குகளில் முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மனுவில் முகாந்திரம் எதுவும் இல்லை என தெரிவித்து அரசால் கைவிட முடிவு செய்யப்பட்ட வழக்கில் தற்சமயம் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்ய முயற்சி செய்து வருகிறது இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் மற்றும் உள்நோக்கத்துடன் எனக்கு எதிராக தொடரப்பட்டு இருக்கிறது ஆட்சி மாற்றம் மற்றும் அரசியல் அழுத்தம் காரணமாக, எனக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது ஏற்புடையது கிடையாது என்று வேலுமணி கூறியிருக்கிறார்.

டெண்டர் நடைமுறைகளுக்கும், எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை, இந்த வழக்கில் எந்த விதத்திலும் தொடர்பில்லாத அரப்போர் இயக்கம் என்னுடைய அரசியல் விரோதிகளுக்கும், டெண்டர் கிடைக்காதவர்களுக்கு நிழலாக இந்த வழக்கை தொடர்ந்து இருக்கிறது. ஆகவே இந்த வழக்கு செல்லத்தக்கது அல்ல என்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

இந்த வழக்குகள் மறுபடியும் தலைமை நீதிபதி சஞ்சீவ் பேனர்ஜி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது அந்த சமயத்தில் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதால் அடுத்தபடியாக இந்த வழக்கை நிலுவையில் வைக்காமல் அரப்போர் இயக்கம் மற்றும் திமுக தொடர்ந்த வழக்குகளை முடித்து வைக்கலாம் என்று கூறியிருந்தார்.

அறப்போர் இயக்கம் சார்பாக வழக்கறிஞர் வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்வது மட்டும் கோரிக்கை கிடையாது உடந்தையாக இருந்தவர்கள், இவரால் பயன் பெற்றவர்கள், உள்ளிட்டோரையும் வழக்கில் சேர்க்கும் விதத்தில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என்றும் மேற்கொண்டு நீதிமன்றம் முடிவெடுத்துக் கொள்ளலாம் எனவும் கூறினார். திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.என். இளங்கோ ஆஜராகி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த படியால் தங்கள் வழக்கை முடித்து வைக்கலாம் என்று கூறினார். வேலுமணி தரப்பில் வழக்கை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும், அதே நேரம் தனக்கு எதிரான வழக்கு எந்த அடிப்படையில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என்பது குறித்த ஆவணங்களை தமக்கு வழங்க வேண்டும் என்றும் கூறினார். இதனை தொடர்ந்து இரண்டு வழக்குகளையும் விசாரணையையும் அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்து இருக்கிறார்கள் நீதிபதிகள்.

Previous articleஉள்நாட்டு போரின் முக்கிய கட்டம்! ஆயுத உதவி செய்யும் துருக்கி! குழந்தைகள் உட்பட பலர் பலி!
Next articleமனிதருக்கு பொருத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகம்!