லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை! நன்றி தெரிவித்த எஸ் பி வேலுமணி!

0
138

முன்னாள் அமைச்சர் வேலுமணி சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்ட இந்நிலையில், அவர் இன்று திருச்செந்தூர் சென்று இருக்கின்றார். முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருக்கிறது. திமுக ஆட்சி அமைந்திருக்கின்ற நிலையில், முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் அடுத்து நேற்று எஸ் பி வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை செய்தது.

இந்த நிலையில், கைது நடவடிக்கையிலிருந்து தாக்கியதன் காரணமாக, முன்னாள் அமைச்சர் வேலுமணி இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றதாக தகவல் கிடைத்திருக்கிறது. இது தொடர்பாக அதிமுக வட்டாரத்தில் விசாரணை செய்த சமயத்தில் தகவல் உண்மையில்லை என்று சொல்லப்படுகிறது.

இன்று காலை சுமார் ஏழு முப்பது மணி அளவில் தூத்துக்குடி விமான நிலையம் வந்த முன்னாள் அமைச்சர் வேலுமணி கார் மூலமாக திருச்செந்தூர் அருகில் இருக்கின்ற நாடு நாலு மூலை கிணறு என்ற கிராமத்தில் அமைந்திருக்கின்ற சித்ரா லாட்ஜ் உரிமையாளருக்கு சொந்தமான தோட்டத்திற்கு சென்று இருக்கிறார். அங்கே சில நண்பர்களிடம் சில முக்கியமான விஷயங்களை உரையாடிவிட்டு மதியம் இரண்டு முப்பது மணி அளவில் விமானத்தில் திரும்ப இருக்கின்றார் என்று சொல்லப்படுகிறது.

இதற்கு இடையில் வேலுமணி தன்னுடைய வலைதளப் பக்கத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, திமுக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை சமயத்தில் நியாயத்தின் பக்கம் நின்று எனக்கு நம்பிக்கை ஊட்டும் விதத்தில் எனக்கு ஆதரவாக நின்ற கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களுக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர்கள், கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், நண்பர்கள், பொதுமக்கள், போன்ற எல்லோருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி என்று பதிவு செய்திருக்கிறார்.

ஆடிப்பூரம் நாளான இன்றைய தினம் தமிழகம் முழுவதும் இருக்கின்ற கோவில்களை திறக்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டு இருப்பதால் திருச்செந்தூர் முருகன் கோவிலும் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Previous articleபிள்ளையிடம் தாயின் ஆவேசம்! மகளின் மனஉளைச்சல்! பின் ஏற்பட்ட பரிதாப நிலை!
Next articleஇந்தப் பக்கம் பணம் அந்தக் கையில் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்! ஆசையால் மோசம்போன இன்ஜினியரிங் ஸ்டுடென்ட்!