எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு! சற்று முன் வெளியான தகவல்

Photo of author

By Anand

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு! சற்று முன் வெளியான தகவல்

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சற்று முன் மரணம் அடைந்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு தற்போது வயது 74.

கொரோனா தொற்றால் பாதிக்கபட்ட எஸ்.பி பாலசுப்பிரமணியம் கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி முதல் சென்னையிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் எக்மோ கருவி, மற்ற உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு செய்யபட்ட சோதனையில் கொரோனா தொற்று இல்லை என்று மருத்துவமனை சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டது. இருந்தாலும் அவருக்கு நுரையீரல் சம்பந்தமான பிரச்சனை இருப்பதால் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சற்று முன் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது.