விரைவில் கூடவிருக்கும் தமிழக சட்டசபை கூட்டம்! பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எந்த வரிசையில் இடம் சபாநாயகரின் அதிரடி பதில்!

Photo of author

By Sakthi

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் அவர் இந்த கூட்டத்திற்கு வருகை தரவில்லை என்று சொல்லப்படுகிறது.

மேலும் சென்னை வானகரத்தில் அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டமைப்பின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களாக உள்ளன என்றாலும் அவர்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்குள் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் புகுந்து சில முக்கிய கோப்புகளையும் கணினியையும் எடுத்துச் சென்று விட்டதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பான வழக்கு காவல் நிலையத்திலிருக்கிறது.

அன்றைய தினம் அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் உள்ளிட்டோரின் ஆதரவாளர்களையே பெரும் மோதல் வெடித்தது இதில் பன்னீர்செல்வம் கடப்பாரையை கொண்டு அதிமுகவின் தலைமை அலுவலகத்தின் கதவை உடைத்து அங்கிருந்த பல முக்கிய ஆவணங்களை திருடி சென்று விட்டதாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அதிமுக சார்பாக புகார் வழங்கப்பட்டது.

மேலும் அதிமுகவின் பொருளாளர் பதவியிலிருந்தும் மற்ற அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் எடப்பாடி பழனிச்சாமி அன்றைய தினமே அதிரடியாக நீக்கப்பட்டார். மேலும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்ற பதவியும் அவரிடமிருந்து பறிக்கப்பட்டு ஆர்பி உதயகுமாரிடம் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பாக முதல் நிலவி வருகிறது. எனவே பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி என்று இரு அணிகளாக அந்த கட்சி பிளவுபட்டுள்ளது.

இவர்களிடவே அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியிலிருந்து பன்னீர்செல்வத்தை நீக்கி ஆர்பி உதயகுமாரை நியமனம் செய்து இது தொடர்பான கடிதத்தை சபாநாயகரிடம் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் வழங்கினார்கள். அதோடு அதிமுகவிலிருந்து பன்னீர்செல்வம், மைதிலிங்கம், மனோஜ் பாண்டியன் உலிதுறை நீக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பன்னீர்செல்வம் சட்டசபையின் சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி மற்றும் இருக்கை ஒதுக்கீடு தொடர்பாக எந்த விதமான முடிவும் மேற்கொள்ளக்கூடாது என்று தெரிவித்திருந்தார்.

சட்டசபை கூட்டம் இந்த மாத நடுப்பகுதியில் ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் இணையதள சூதாட்டம் சட்ட மசோதா நிறைவேற்றப்பட உள்ளது இதற்கான ஏற்பாடுகள் சட்டசபை வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இது குறித்த கேள்விக்கு திருநெல்வேலி யில் சட்டசபையின் சபாநாயகர் அப்பாவு பதில் வழங்கியுள்ளார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது அதிமுக பிரச்சனையை தொடர்பாக உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் வரையில் வழக்குகள் சென்றுள்ளது உயர்நீதிமன்றத்தில் ஒரு தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வருகிறது உச்சநீதிமன்றத்தில் இன்னொரு தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வருகிறது. இவை அனைத்தையும் கடந்து தேர்தல ஆணையம் என்பது இருக்கிறது அது அரசியல் கட்சிகளுக்கு இறுதி முடிவை சொல்லக்கூடிய ஒரு இடமாகும்.

சட்டமன்றத்தை பொறுத்தவரையில் சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் உள்ளிட்டோருக்கு என்ன பதவி எந்த இடத்தில் இருக்கை ஒதுக்குவது என்பது சபாநாயகரின் முழுமையான உரிமை சட்டசபையில் நடைபெறும் போது அனைத்தும் சரியாகவே நடக்கும் என்று தெரிவித்தார்.