உங்களைப் போல சரளமாக தமிழ் பேச வேண்டும் என்பதே என் ஆசை – தமிழக ஆளுநர்!

Photo of author

By Savitha

உங்களைப் போல சரளமாக தமிழ் பேச வேண்டும் என்பதே என் ஆசை என தமிழில் பேசிய ஆளுநர்.

அம்பேத்கர் இன்றும் சட்டத்தின் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்தியா உடையாமல் இருந்ததில் அம்பேத்கரின் பங்கு அளப்பரியது.

அம்பேத்கருக்கு புகழ் கிடைக்கக்கூடாது என அவரது பங்களிப்பை மறைத்துவிட்டனர்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தை அம்பேத்கரின் 133 வது பிறந்த நாளான இன்று சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது உறுவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன், தேசிய தூய்மை பணியாளர் நல ஆணைய தலைவர் வெங்கடேசன் கலந்துகொண்டனர்.

இதில் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு குறித்து பேசிய மாணவிகளுக்கு ஆளுநர் ரவி சால்வை அணிவித்து, அம்பேத்கரும் மோடியும் என்ற புத்தகத்தை பரிசாக வழங்கினார்.

இந்தியாவின் சிறந்த மகன் ஒருவரது 133வது பிறந்தநாளை நாம் கொண்டாடுகிறோம். அவர் மீதான அன்பின் காரணமாக பாபாசாகேப் என அழைக்கிறோம்.

நாம் அம்பேத்கரை நம்முடைய புரிதலுக்கேற்ப புரிந்துகொள்ள முயல்கிறோம். இது கண் தெரியாதவன் யானையை புரிந்துகொள்ள முயல்வது போன்றது.

பிரிட்டீஷ் அரசாங்கம் விட்டுவிட்டுச் சென்ற இந்தியாவில், அம்பேத்கரை சிறுமைப்படுத்த பலர் முயற்சி செய்தனர். அதன் காரணமாகவே அம்பேத்கர் ஒரு சாதியின் தலைவராக குறைக்கப்பட்டிருக்கிறார்.

அம்பேத்கருக்கு சமமாக நிற்க முடியாததால், அப்போதைக பிரதமர் கூட அவரை மோசமாக நடத்தினார்.

அம்பேத்கர் இயற்றிய சட்டங்கள் கடந்த காலத்தில் மக்கள் பட்ட இன்னல்களுக்கு பதில் சொல்வதாகவும், எதிர்காலத்தை கணித்து மக்களின் வளர்ச்சியை கவனத்தில் கொண்டும் இயற்றப்பட்டுள்ளன.

எப்படிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும், அவற்றுக்கு பதில் நம் சட்டத்தில் உள்ளது. வடகிழக்குப் பகுதிகளில் நான் இருந்தபோது, அதனை கண்கூடாகக் கண்டேன்.

இப்படியொரு நிலை வரும் என யாரும் யூகிக்க முடியாத சூழலுக்குக் கூட ஒரு தீர்வினை வைத்து சட்டத்தை இயற்றியிருக்கிறார் அம்பேத்கர்.

அம்பேத்கர் இன்றும் சட்டத்தின் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

சுதந்திர போராட்டத்தின் போது சாதி, மதமாக நம்மை பிரிக்க முயற்சித்தனர்.

நிலத்தை வைத்து மக்களை பிரிக்காமல், இனத்தை வைத்து பிரித்தனர். ஒரு பக்கம் இந்துக்களும், இஸ்லாமியர்களும் ஒன்றாக இருக்க முடியாது என்றும், வட கிழக்குப் பகுதியினர் இந்தியர்களே இல்லை என்றும் பிரிக்க முயன்றபோது தலித்துகள், தலித்துகள் அல்லாதோர் என்றும் பிரிக்கமுயன்றனர்.

பிரிட்டிஷ் விட்டுச் சென்ற பிரிந்துகிடந்த இந்தியாவை ஒன்று சேர்த்த சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு முன்பு இந்தியா பிரிந்துவிடக்கூடாது என அனைவரும் சேர்ந்து ஒன்றாக நின்று எதிர்க்கவேண்டும் என மகாத்மாவுடன் நின்றவர் அம்பேத்கர்.

அம்பேத்கர் மாதிரியானவர்கள் புகழ் வெளிச்சத்துக்கு வரக்கூடாது என நினைத்த சிலர், அவரது பங்களிப்பை மறைத்தனர். பாபாசாகேப் புகழ் பெற்றால் நாம் காணாமல் போய்விடுவோம் என நினைத்து அவரை காணாமல் போகச் செய்தனர்.

சாதியே இருக்கக்கூடாது என நினைத்த பாபாசாகேப்பை ஒரு சமூகத்தின் தலைவராக்கிவிட்டார்கள். எதிர்கால இந்தியாவில் சாதியே இருக்கக்கூடாது.

பாரதியாரின் பாருக்குள்ளே நல்ல நாடு என்பது அம்பேத்கரின் கனவு பாரதத்தை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டது.

பாபாசாகேப் இயற்றிய சட்டத்தின் ஒரு ஆர்ட்டிக்கள் அதிகம் பேசப்படாத ஒன்றாக உள்ளது. அது, குடிமகனின் அடிப்படை கடமைகள் என்பது தான். அப்படித்தான் ஒவ்வொரு இந்தியனும் இருக்கவேண்டும் என பாபாசாகேப் விரும்பினார்.

இந்தியாவின் சுதந்திர நூற்றாண்டைக் கொண்டாடும் போது இந்தியா முழுமையாக வளர்ந்த நாடாக இருக்கவேண்டும்.

இந்தியா முழுவதுமாக வளர்ச்சியடைந்தால் தான் இந்த உலகம் நம் நாடின் பேச்சைக் கேட்கும். அப்போது நாம் சகோதரத்துவத்துடன் இந்த உலகை வழிநடத்திச் செல்லும் நிலை ஏற்படும். அம்பேத்கரின் கனவை நினைவாக்கும் விதத்தில் செயல்பட்டுவரும் நம் பிரதமர் எல்லோருடனும், எல்லோருக்காகவும், எல்லோரும் என்பதை உயிர்மூச்சாகக் கொண்டு உழைக்கிறார்.

2047ஆம் வருடம் இந்தியா நிச்சயமாக முழுமையாக வளர்ந்த நாடாக இருக்கவேண்டும்.

இந்த உலகமே ஒரே குடும்பமான வாசுதேவ குடும்பமாக மாறவேண்டும். அதற்கு அனைத்து விதத்திலும் இந்தியா வளர வேண்டும்.

இந்தியா உலக லீடராக வளரும்போது, இப்போது பதவியில் இருப்பவர்கள் கடந்த காலமாக மாறிவிடுவார்கள். நீங்கள் தான் முதல் வரிசையில் இருப்பீர்கள். அப்போது, பாபாசாகேப்பின் கனவை நிறைவேற்ற நாம் என்ன செய்தோம் என கேட்டுக்கொள்ளும்போது என்ன பதில் சொல்லவேண்டும் என இப்போதே யோசித்துக்கொள்ளுங்கள்.

நான் யாரோ, ஒருவருடைய மகன், மகள் என்று மட்டும் நீங்கள் நினைக்கக்கூடாது. ஆம், நீங்கள் யாரோ ஒருவருடைய மகனோ, மகளோ தான். ஆனால், அதே நீங்கள் தான் இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகும் சக்தி என்பதை உணரவேண்டும்.

மாணவர்கள் விதைகளாக இருந்து, ஆலமரம் போல வளர்ந்து இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவவேண்டும். அது கண்டிப்பாக நடக்கவேண்டும்.

உங்கள் கனவையும், குதிக்கோளையும் அடைய எந்த மாதிரியான தயக்கமும் உங்களிடம்பிருக்கக்கூடாது. நீங்கள் வளர்ந்தால் தான் நாடு வளரும்.