இந்த தினங்களில் சிறப்பு பேருந்து மற்றும் ரயில்கள் இயக்கம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! 

Photo of author

By Parthipan K

இந்த தினங்களில் சிறப்பு பேருந்து மற்றும் ரயில்கள் இயக்கம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! 

Parthipan K

Special bus and train operation on these days! Southern Railway announced!

இந்த தினங்களில் சிறப்பு பேருந்து மற்றும் ரயில்கள் இயக்கம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!

தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் நாளை திருவண்ணாமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகின்றது.

வந்த விழாவானது தொடர்ந்து பத்து நாட்களுக்கு நடைபெறும்.மேலும் டிசம்பர் 6 ஆம் தேதி மகாதீப பெருவிழா நடைபெறும்.இந்த தீபத்திருவிழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம் தான்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா  பரவல் காரணமாக பக்தர்களை அனுமதிக்கப்படமல் கார்த்திகை தீபம் நடத்தப்பட்டது.தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் இந்த ஆண்டு தீபத்திருவிழாவை காண சுமார் 40 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என கூறப்படுகின்றது.அதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு 14 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என கூறப்படுகிறது.மேலும் முன்னதாக 9 ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.இந்நிலையில் பொதுமக்களின் நலன் கருதி கூடுதலாக ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ரயில்கள் டிசம்பர் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் இயக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த ரயில்கள் இயக்கப்பட காரணம் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களுக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

மேலும் தமிழக போக்குவரத்து கழகத்தின் சார்பாக பொதுமக்களின் வசதிக்கேற்ப இந்தாண்டு அனைத்து பகுதிகளில் இருந்தும் 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.