அரசு பள்ளி மருத்துவ மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்!! மக்கள் நலவாழ்வுதுறை வெளியிட்ட புதிய அறிவிப்பு!!
கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்று முடிவடைந்தது. அதனையடுத்து கடந்த மே மாதம் 8 ஆம் தேதி +2 பொதுத்தேர்வுகளின் முடிவுகள் வெளிவந்தது. மேலும் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் மேற்ப்படிபிற்கு சேர விண்ணப்பித்திருந்தார்கள்.
அதனை தொடர்ந்து தமிழகத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு சேர கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து இருந்தர்கள. அதனையடுத்து நாடு முவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் மாதம் வெளிவந்தது. அதனையடுத்து ஜூலை 12 ஆம் தேதி மருத்துவ படிப்பிற்கான இளங்கலை மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. மேலும் அவர்களின் எதிர் காலத்திற்கும் பல வசதிகளை ஏற்ப்படுத்தி தருகிறது. மேலும் தற்போது எல்லாம் தமிழ் மொழியில் கல்வி பயலும் மாணவர்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.
இந்த நிலையில் தமிழ் மொழியில் பயலும் மாணவர்களுக்கு அரசு துறையில் வேலைவாய்ப்பு பெற 20 % சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மேற்படிப்பிற்கு சேரும் போதும் மருத்துவம் மற்றும் பொறியியல் கலந்தாய்வுகளில் தமிழ் வழி பயன்ற மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் தமிழ் வழி படித்த மாணவர்களுக்கு, ஆங்கிலத்தில் மருத்துவ கல்வி படிக்க சிரம்மம் இருக்கும். இதனை கருத்தில் கொண்டு மருத்துவம் சார்ந்த ஆங்கில வார்த்தைகளை புரிந்து கொள்ள சிறப்பு வகுப்புகள நடத்தப்படும் என்று மக்கள் நலவாழ்வுதுறை அறிவித்திருந்தது. மேலும் ஏற்கனவே இதற்கான அனுமதி கோரி இருந்தது.
அதனை தொடர்ந்து இந்த ஆண்டு அதற்கான அனுமதி கிடைந்துள்ளது. இந்த ஆண்டு சிறப்பு வகுப்பு நடத்தப்பட திட்டமிட்டுள்ளது. மேலும் சிறப்பு வகுப்பின் மூலம்அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் பேசவும் எழுதவும் மருத்துவ வார்த்தைகளை எளிதில் புரிந்து கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளது. அந்த மக்கள் நல்வாழ்வுத்துறை திட்டம் அரசு பள்ளி மருத்துவ மாணவர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.