வெற்றி உறுதி! பழைய பைலை தூசிதட்டும் திமுக!

Photo of author

By Sakthi

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சசிகலா உள்ளிட்டோருக்கு 4 வருட சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி அதிரடி தீர்ப்பை வழங்கினார். பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அவர் வழங்கிய இந்த தீர்ப்பானது தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே கவனிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 7ஆம் தேதி நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா பணி ஓய்வு பெற்றார்.

அவர் பணியிலிருந்து ஓய்வு அடைந்ததை முன்னிட்டு திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக இருந்து வரும் முரசொலியில் ஒர் செய்தி வெளியிடப்பட்டது. அதில் நீதிபதி குன்ஹா தொடர்பாக பாராட்டி எழுதப்பட்டிருந்தது.

ஜான் மைக்கெல் டி குன்ஹா இந்த பெயரை யாரும் மறந்திருக்க முடியாது. இந்திய வரலாற்றில் நீதித்துறை எவ்வளவு ஆண்டுகள் கடந்தாலும் நிலைத்து நிற்கும் பெயர்தான் குன்ஹா ஒரு தீர்ப்பின் மூலம் மட்டுமல்லாது காலங்கள் பல கடந்தும் நிலைத்து நிற்கின்ற பெயர்தான் குன்ஹா ஜெயலலிதாவைப் பொறுத்தவரையில் அனைத்திற்கும் அளவுகோல் அவருடைய ஆணவம், அந்த ஆணவத்தின் அளவுகோல் பணம் இந்த இரண்டில் மட்டும் தான் அவருடைய அரசியல் வாழ்க்கை அமைந்திருந்தது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் அந்த ஆணவத்தையும், அதற்கு அடிப்படையாக இருந்த பணத்தையும் தன்னுடைய தீர்ப்பின் மூலம் அதனை குப்பைத்தொட்டியில் வீசியவர்தான் குன்ஹா என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. திமுகவின் இந்த புகழாரத்திற்கு காரணம் என்னவென்றால் திமுக ஆட்சிக்கு வந்தால் தற்போதைய அமைச்சர்கள் மீது உள்ள புகார்மீது விசாரனை செய்ய தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.அதற்காக நீதிபதி குன்ஹாவிடம் ஆலோசனை பெற திட்டமிட்டிரொபதாக தெரிகிறதுஇது குறித்து அவரிடம் ஆலோசனை செய்ய திமுக சீனியர்கள் தயாராக இருப்பதாக சொல்கிறார்கள்.