பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு – அரசுக்கு பத்திரிக்கையாளர் ஏழுமலை வெங்கடேசன் ஆலோசனை முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வரவேற்பு

Photo of author

By Parthipan K

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்புத் தேர்வு பத்திரிக்கையாளர் ஏழுமலை வெங்கடேசன் ஆலோசனை முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வரவேற்பு

தமிழகத்தின் மூத்த பத்திரிக்கையாளர் ஏழுமலை வெங்கடேசன் அவர்கள் பலரும் சிந்திக்காத பல்வேறு விடயங்களை பற்றி தொடர்ந்து தனது ஆக்கப்பூர்வமான கருத்தை பதிவு செய்து வருபவர்.

அந்த வகையிலே இன்று அவர் தனது முகநூல் பக்கத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் நலனை கருத்தை கொண்டு அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளாக தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
அவர் தனது முகநூலில் தெரிவித்துள்ளதாவது :

ஒவ்வொரு தரப்பு மனநிலையையும் இந்த அரசாங்கம் சிந்திக்க வேண்டும்.
உதாரணத்திற்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை கூறலாம்.
பல லட்சம் மாணவர்கள் அதைப்பற்றிய சிந்தனையிலேயே கடுமையான மனஅழுத்தத்தில் உள்ளனர்.

அந்த மாணவர்களையும் அவர்களின் பெற்றோரையும் அதிலிருந்து இப்போதே விடுவிப்பது நல்லது. என்னைக்கேட்டால், பத்தாம் வகுப்பு மாணவர்கள் அப்படியே பதினோராவது தொடர வகை செய்யலாம்.

ஃபர்ஸ்ட் குரூப்.. மற்றும் பாலிடெக்னிக் போன்ற டிப்ளமோ கோர்ஸ் போக விரும்புவர்கள் மட்டும் ஒரு சிறிய சிறப்பு தேர்வு எழுதினால் போதும். நம்ம யோசனை இவ்ளோதான். உங்களுக்கு தெரிந்தால் நீங்களும் யோசனை சொல்லுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதனை முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களும் வரவேற்று தன்னுடைய முகநுல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.