இந்த அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை! அரசின் அடுத்த அதிரடி!

Photo of author

By Rupa

இந்த அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை! அரசின் அடுத்த அதிரடி!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியை கைப்பற்றியது.அதனையடுத்து தமிழக முதல்வராக பதவியேற்ற ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பல புதிய திட்டங்களை வகுத்து வருகிறது.அதுமட்டுமின்றி பல புதிய கட்டுப்படுகளையும் அமல்படுத்தி வருகிறது.அந்தவகையில் அரசு ஊழியர்களுக்கு அதிகளவு சலுகைகளை கொடுத்து வருகிறது.

முதலில் தற்காலிகமாக இருந்த மருத்துவ செவிலியர்களை நிரந்தர பணியில் அமர்த்தினர்.அதனையடுத்து தற்காலிக பணியில் இருந்த அரசு பெண்களுக்கு ஓர் வருட காலம் மகப்பேறு விடுப்பு அளிக்காமல் இருந்தது.அதனையடுத்து தற்காலிகம் மற்றும் நிரந்தர பணியில் இருப்பவர்களுக்கு எந்தவித பாகுபாடுகளும் காணப்படமாட்டது.அனைவருக்கும் ஒரே நிலையான விடுப்பு அளிக்கப்படும் என கூறினர்.

தற்பொழுது கொரோனா தொற்றின் இரண்டாம் கட்ட அலையின் நிலை முடிவுக்கு வந்துள்ளது.இந்நிலையின் தொடக்கத்தில் மக்களை காப்பாற்ற மருத்துவர்கள் மற்றும் அது சம்பந்தமான பல துறையினர் விடுப்பு எடுத்து கொள்ளாமல் மக்களின் நலனுக்காக வேலை பார்த்து வந்தனர்.அவர்களுக்கும் அரசாங்கம்,தொற்றின் இரண்டாம் கட்ட நிலை பாதிப்பு குறைந்தவுடன் அவர்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது.கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து தற்போது தான் அனைத்து துறைகளும் இயங்க ஆரம்பித்துள்ளது.

அவ்வாறு ஆரம்பித்துள்ள அனைத்து துறைகளிலும் பாதுகாப்பு விதிமுறையை கருதி பல்வேறு நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு கூறியுள்ளனர்.அதனையடுத்து தற்போது அரசு ஊழியர் பெண்களுக்கும் பல நலத்திட்டங்களை ஆளுங்கட்சி அமல்படுத்தியுள்ளது.அந்தவகையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய குழந்தைகளின் அரசு ஊழியர்களுக்கு புதிய சலுகை ஒன்றை அமல்படுத்தியுள்ளனர்.

அதன் அடிப்படையில் தற்போது சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய குழந்தைகளை பெற்ற அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறையாக 6 நாட்களை அமல்படுத்தியுள்ளனர்.இந்த விடுமுறையானது ஓர் ஆண்டுக்கு நான்கு நாட்கள் மட்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.இதனடிப்படையில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் இதுபற்றி அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.