பாஜகவிற்காக காங்கிரஸ் நடத்திய சிறப்பு பூஜை! இது மூலாமாவது பலன் கிடைக்குமா?

0
172
Special puja conducted by Congress for BJP! Will it be beneficial in the first place?
Special puja conducted by Congress for BJP! Will it be beneficial in the first place?

பாஜகவிற்காக காங்கிரஸ் நடத்திய சிறப்பு பூஜை! இது மூலாமாவது பலன் கிடைக்குமா?

கர்நாடக மாநிலத்தில் கடந்த மாதம் பாஜக இளைஞரணி உறுப்பினரான பிரவீன் என்பவரை மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக தாக்கியது. அவ்வாறு தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பிரவீன் உயிரிழந்தார். இந்த கொலை சம்பவத்தால் கர்நாடகா மாநிலம் முழுவதும் பரபரப்பாகவே காணப்பட்டது. பல இடங்களில் போர்க்கடிகள் தூக்கப்பட்டது. இந்த படுகொலைக்கு அம் மாநில முதல்வர் பசவராஜும் கண்டனம் தெரிவித்தார்.

அதனையடுத்து பாஜக கட்சியின் இளைஞர் அணி தேசிய தலைவரான  தேஜஸ்வி சூர்யா என்பவர்  செய்தியாளர்களிடம் இந்த படுகொலை குறித்து பேட்டி அளித்தார். அவர் பேசுகையில் இந்த கொலை சம்பவத்தில் மட்டும் தற்போது ஆட்சியில்  காங்கிரஸ்  இருந்திருந்தால் கட்டாயம் கற்கள் வீசப்பட்டு இருக்கும் என்று கூறினார். இவர் எவ்வாறு இப்படி பேசலாம்? இவருக்கு புத்தி சரியில்லை என கண்டித்து மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான சங்கர் என்பவர் தனது அலுவலகத்தில் பூஜை நடத்தியுள்ளார்.

பாஜக எம்பி புத்தி இல்லாமல் இவ்வாறு பேசியுள்ளார்,நல்ல புத்தி வர வேண்டும் என்பதற்காக இப்பூஜை நடத்தியதாக தெரிவித்தார். பூஜையில் வழங்கப்பட்ட பிரசாதத்தை பாஜக இளைஞரணி பிரமுகரான தேஜஸ்வி சூர்யா விற்கும் கொடுத்துள்ளார். தனக்கு புத்தி இல்லை ,நல்ல புத்தி கொடுக்க வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்ட பூஜை குறித்து  எம்பி சூர்யா மிகவும் கோபமடைந்துள்ளார்.

கோபத்தின் வெளிப்பாடாக பிரசாதம் கொடுத்து அனுப்பிய காங்கிரஸ் தொண்டர்கள் இருவரையும் போலீசாரை விட்டு கைது செய்யும் படி வைத்துள்ளார்.இது குறித்தும் பூஜை நடத்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். தங்களின் சுயநலத்திற்காக அரசாங்கத்தை பயன்படுத்துவதையே இளைஞராணி தேச தலைவரான தேஜஸ்வி சூர்யா மற்றும் ரவி சுப்பிரமணி ஆகியோர் தினசரி  வேலையாகவே வைத்துள்ளனர்.

இது மிகப்பெரிய குற்றமாகும். இவர்கள் போலீசார் ஏவினாலும் சரி அல்லது வேறு ஏதேனும்  வழிகளில் எங்களை தாக்க நினைத்தாலும் சரி நாங்கள் சிறிதளவு கூட அஞ்ச மாட்டோம் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சங்கர் கூறியுள்ளார். இத்தோடு ‘விரோதம் விடுங்கள் எம்பி தேஜஸ்வி சூர்யா’ என்ற இயக்கத்தையும்  இவர்களுக்காகவே ஆரம்பித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

Previous articleஅஜித் 61 படத்தில் இணைந்த யுடியூப் பிரபலம்… வைரலாகும் புகைப்படம்!
Next articleதேனி மாவட்டத்தில் புதிய நூலகம்! தொடக்க பணிகள் இன்று முதல் ஆரம்பம்!