தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை ரத்து! தெற்கு ரயில்வே

Photo of author

By Parthipan K

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் இயக்கப்பட்டு வருகிற சிறப்பு ரயில்கள் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.

கொரோனா பாதிப்பின் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் ரயில் சேவைகள் முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர், ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டதை அடுத்து, தமிழகத்துக்குள் சில சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது அந்த சிறப்பு ரயில்களும் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருச்சி – செங்கல்பட்டு, மதுரை – விழுப்புரம், அரக்கோணம் – கோவை போன்ற சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவை – மயிலாடுதுறை, திருச்சி – நாகர்கோவில், கோவை – காட்பாடி ஆகிய சிறப்பு ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

இந்த ரயில்களுக்கு முன்பதிவு செய்த பயணிகள் அனைவருக்கும் கட்டணம் முழுமையாக திருப்பி வழங்கப்படும். சென்னை சென்ட்ரல் – டெல்லி இடையேயான ராஜ்தானி சிறப்பு ரயில் வழக்கம் போல் செயல்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.