சபரிமலை கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! எந்தெந்த தேதிகளில் தெரியுமா!
சபரிமலை பம்பைக்கு நேற்று முன்தினம் மாநில காவல் துறை தலைவர் அனில் காந்த், பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார்.அப்போது அவர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கடந்த இரண்டு ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
அதனையடுத்து நடப்பாண்டில் தான் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.தற்போது நடக்கும் யாத்திரையில் பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.அதனால் ஆறு கட்டங்களாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.
மேலும் கோவில் மண்டல பூஜை வருகிற 17ஆம் தேதி தொடங்க உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும் 16 ஆம் தேதி மாலை 5மணிக்கு திறக்கப்படுகிறது.மேலும் 17ஆம் தேதி முதல் அடுத்த 41நாட்களுக்கும் ஐயப்பன் கோவில் நடை திறந்திருக்கும் என அறிவித்துள்ளனர்.
அதனையடுத்து வரும் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் பக்தர்கள் மாலை அணிந்து கடும் விரதம் இருந்து வருவார்கள்.நாடு முழுவதில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம்.அந்நிலையில் ஐயப்பனை தரிசிக்க ஆன்லைன் மூலம் பக்தர்கள்.முன்பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வருகிற பக்தர்கள் அவதிபடுவதை தடுக்கும் விதமாக தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் சென்னை ,எழும்பூர் கொல்லம் இடையே சபரிமலை வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
அதன்படி திங்கள் ,புதன் ,வெள்ளி ஆகிய தினங்களில் சென்னை எழும்பூரில் இருந்து கொல்லம் நோக்கி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருகின்றது.மேலும் செவ்வாய் ,வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் கொல்லத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.