ஜெயா தொலைக்காட்சியில் ஜெயலலிதாவிற்கு எதிரான பேச்சு ஒளிபரப்பி இருப்பது ஜெயலலிதாவின் விசுவாசிகளை கோபமுறச் செய்திருக்கின்றது.
அண்மையில், பரப்புரையில் பேசிய சீமான் எம்.ஜி.ஆர் தொடர்பாக உரையாற்றினார். அப்போது ரஜினியும் கமலும் எம்.ஜி.ஆரை தூக்கி பிடிப்பதால் அந்த வாக்குகள் அனைத்தும் அதிமுகவிற்கு தானே செல்லும் சட்டசபை தேர்தலில், ரஜினி, மற்றும் கமல் பெறுகின்ற அடியில், விஜய் உள்பட திரைத்துறையில் இருந்து யாருமே அரசியலுக்கு வரக்கூடாது என்று பேசியிருந்தார். அதோடு பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர் ஆதரவளித்தார். அதன் காரணமாக அவர் மீது மதிப்பு இருக்கின்றது. மற்றபடி என்ன நல்லாட்சியை கொடுத்து விட்டார். என்ற கேள்வியையும் எழுப்பினார். ஜெயலலிதாவையும் மிகக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இந்த செய்தியை ஜெயா தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்தது ஜெயா தொலைக்காட்சியை தொடங்கியதே ஜெயலலிதாதான், அவ்வாறு இருக்கும்போது அவருக்கு எதிரான ஒரு பரப்புரையை அந்த தொலைக்காட்சியில் எவ்வாறு ஒளிபரப்பலாம்? என்று ஜெயலலிதாவின் விசுவாசிகள் கொந்தளித்து இருக்கிறார்கள். இது குறித்து அரசியல் விமர்சகர் கிஷோர் கே. சாமி தன்னுடைய வலைதளப் பக்கத்தில் சீமான் என்கிற தற்குறி செல்வி. ஜெயலலிதாவையும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரையும் தவறான முறையில் பேசியிருப்பது ஆச்சரியம் இல்லை. அதை ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பியது தான் மிக மிகக் கேவலம். இதற்கு விவேக் ஜெயராமன் துணை போனது அதைவிட கேவலம் உங்களுக்கெல்லாம் சோறு எவ்வாறு இயங்குகின்றது என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.