பாஜகவின் தலைமைக்கு எம்ஜிஆர் மீது வந்த திடீர் பாசம்!

0
116

அதிமுகவின் நிறுவனரான எம்.ஜி.ஆர் உடைய நினைவு நாளான இன்று முதல் முறையாக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக அந்த கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் எம்.ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி இருக்கின்றார் பகல் 12 மணி அளவில் எம்ஜிஆர் நினைவிடத்திற்கு அவர் வந்ததாக சொல்லப்படுகின்றது.

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த வருடம் ஏப்ரல், அல்லது மே மாதங்களில் நடைபெற இருக்கிறது என்று சொல்லப்படும் வேலையில், அந்த தேர்தலை எதிர்கொள்வதற்காக தமிழக அரசியல் கட்சிகள் தங்களை தயார் படுத்தி வருகிறார்கள். எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் போன்ற யோசனைகளை அரசியல் கட்சிகள் மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறார்கள்.

எப்பொழுதும்போல அதிமுக, மற்றும் திமுகவினர், இடையே மிகப்பெரிய போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக தெரிவித்திருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த நிலையிலே எப்படியாவது மக்களின் மனதைக் கவர்ந்து வாக்குகளை பெறுவதற்காக பல வியூகங்களை வகுத்து வந்த தமிழக பாஜக, எம்.ஜி.ஆர் உடைய நினைவு நாளான இன்று அவருடைய நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி இருக்கின்றது. இது எந்த அளவிற்கு அந்த கட்சிக்கு கைகொடுக்கும் என்று பொருத்திருந்து பார்க்கலாம்.

இதுவரை எம்ஜிஆரின் பெயரை சொன்ன தேமுதிக தலைவர் விஜயகாந்த் ,முதல் எம்.ஜி.ஆரின் புகழ் பாடிய அனைவரும் அரசியலில் ஒரு புதிய இடத்திற்கு சென்று இருக்கிறார்கள் என்பதை தான் நாம் பார்த்து இருக்கின்றோம். அதே போல இப்பொழுது பா.ஜ.க அந்த வித்தையை கையில் எடுத்து இருக்கின்றது அது எந்த அளவிற்கு பலனளிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.