வேகமெடுக்கும் தக்காளி காய்ச்சல்! குழந்தைகளே உஷார் !

Photo of author

By Parthipan K

வேகமெடுக்கும் தக்காளி காய்ச்சல்! குழந்தைகளே உஷார் !

மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் நாடு முழுவதும் 82க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது எனவும் தகவல் தெரிவித்துள்ளது.  தற்போது 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சல்லுக்கு  கை, கால் வலி மற்றும் வாய்ப்புண் ஆகியவை அறிகுறிகளாக கண்டறியப்பட்டுள்து. .

இந்நிலையில் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் இந்தக் காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.மேலும் இந்த காய்ச்சலுக்கு குறிப்பிட்ட மருத்துவம் இதுவரை கண்டறிய வில்லை. தக்காளி காய்ச்சல் நோய் பரவும் தன்மை கொண்டது. இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும் என்றும் காய்ச்சல் மற்றும் அறிகுறிகள் உள்ள குழந்தைகள் பற்றிய விவரங்களை உடனடியாக சுகாதார துறைக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காய்ச்சல் அல்லது சொறி அறிகுறிகள் ஏற்பட்ட குழந்தைகளை  7 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும். நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு அடிக்கடி தண்ணீர், பால், பழச்சாறு ஆகியவற்றையும் நோய் எதிர்ப்பு சக்தி உணவாக தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல் அதிக அளவில் பரவுவதால் மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.கொரோனாவால் கேரளா  மாநிலம் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், தக்காளி காய்ச்சல் என்ற புதிய நோய்  சிறுவர்களிடையே வேகமாக பரவி வருகிறது. கடந்த மே மாதம் 5 ஆம்  தேதி அன்று  கேரளாவில் உள்ள கொல்லத்தில் இந்த நோய் முதன் முதலில் கண்டறியப்பட்டுள்ளது.