எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம் – தமிழக ஆட்சியர் அதிரடி

0
103

எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம் – தமிழக ஆட்சியர் அதிரடி

கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசும், அதிகாரிகளும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தருமபுரி நகராட்சியில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் மாவட்ட கலக்டரான மலர் விழி.

அதன்படி கீழ்க்கண்ட விதிகளை அமல்படுத்தியுள்ளார்:

தர்மபுரி நகராட்சி பகுதியில் வசிக்கும் 33 வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் அனைவருக்கும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைக்கு செல்வதற்காக வார்டு வாரியாக ஒவ்வொரு வீடுகளுக்கும் அனுமதி அட்டை வழங்கப்படும்.

நகராட்சி நிர்வாகத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அனுமதி அட்டை உள்ளவர்களுக்கு மட்டும் வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே வீட்டிலிருந்து வெளியே வர அனுமதிக்கப்படுவார்கள். 15 வயது முதல் 55 வயதுக்குட்பட்ட நபர்கள் மட்டுமே அனுமதி அட்டையைப் பயன்படுத்தி வெளியில் வரலாம்.

நகராட்சி வார்டு எண்.1 முதல் 11 வரை உள்ளவர்களுக்கு இளஞ்சிவப்பு நிறத்தில் அட்டை வழங்கப்படும். அவர்கள் திங்கள் மற்றும் வியாழக்கிழமை மட்டுமே வெளியில் வரவேண்டும். நகராட்சி வார்டு எண். 12 முதல் 22 வரை உள்ளவர்களுக்கு நீல நிறத்தில் அட்டை வழங்கப்படும். அவர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை மட்டுமே வெளியில் வரவேண்டும்.

நகராட்சி வார்டு எண். 23 முதல் 33 வரை உள்ளவர்களுக்கு மஞ்சள் நிறத்தில் அட்டை வழங்கப்படும். அவர்கள் புதன் மற்றும் சனிக்கிழமை மட்டுமே வெளியில் வரவேண்டும்.

தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் வீட்டிலிருந்து பணியிடத்திற்குச் செல்வதற்குத் தொழிற்சாலை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனத்தில் மட்டுமே பயணிக்க வேண்டும். இரு சக்கர வாகனத்தில் பணிக்குச் செல்ல அனுமதி கிடையாது.

பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது. மீறினால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும்

Previous articleநாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும் – டாஸ்மாக் வழக்கில் அரசு பதில் மனு
Next articleஇரு மடங்காக உயரும் ஆம்னி பேருந்து கட்டணம்