பொது தேர்வு – மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

Photo of author

By Parthipan K

வரும் ஜூன் 15ம் தேதி முதல் 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் துவங்கப்படவுள்ளன. இதனை தொடர்ந்து 11 மற்றும் 12ம் வகுப்பு பொது தேவுகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வசதிக்காக 41 வழித்தடங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை ஊழியர்கள் பள்ளிக்கு வருவதற்காக வரும் 8ஆம் தேதியிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பேருந்து வசதியை தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் தேர்வை கண்காணிக்க வரும் ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: