பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தமிழில் டப் செய்யப்படும் ஸ்விக்ட் கேம்!

Photo of author

By Hasini

பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தமிழில் டப் செய்யப்படும் ஸ்விக்ட் கேம்!

நெட்பிளிக்ஸ் ஓ டி டி தளம் என்பது மிகப் பிரபலமான ஒன்று. மேலும் மக்களிடையே அது மிகுந்த வரவேற்ப்பை பெற்றதும் கூட. அதில் பல இணைய தள தொடர்களும் வெளியிடப்படுகின்றது. அதை மக்களும் விரும்பி பார்க்கின்றனர். அதுவும் இந்த கொரோனா காலகட்டத்தில் அனைவரும் வீட்டில் இருந்த சமயம் இது அனைவருக்குமே மிகவும் உதவியாக இருந்தது.

இந்நிலையில் கொரிய இயக்குனர் ஹ்வாங் டாங்-ஹியூக் எழுதி, இயக்கியுள்ள ஸ்விக்ட் கேம் என்ற இந்த தொடரானது கடந்த மாதம் செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி வெளியானது. வெளியான உடனேயே உலகப் புகழ்பெற்ற 10 வெப் தொடர்களில் இடம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. செப்டம்பரில் வெளியான இந்த தொடர் சில தினங்களிலேயே பார்வையாளர்களிடம் மிகுந்த வரவேற்ப்பை பெற்றது.

இதுவரை 90 நாடுகளில் இது முதல் இடத்தைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இது ஒரு கொரியன் தொடர் என்பதன் காரணமாக இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், மிகக் குறுகிய காலத்திலேயே அதிக பார்வையாளர்களை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இந்த தொடர் மிகவும் பிரபலமானது.

இந்தியாவில் பிரபலம் ஆகி விட்டாலும் அதிக பார்வையாளர்களை இது இன்னும் அடையவில்லை. எனவே அவர்களையும் சென்று சேரும் வகையில் இதை தமிழ், தெலுங்கு மொழிகளிலும் தற்போது டப் செய்ய ஆரம்பித்துள்ளது. அதை வெளியிடவும் செய்துள்ளது. ஹிந்தி மொழியில் இது ஏற்கனவே வெளி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

மற்ற மொழிகளில் இந்த தொடர்களை டப் செய்வதன் மூலம் பார்வையாளர்களின் எண்ணிக்கையை 2012 இல் இருந்தே இந்த நிறுவனம் அதிகரித்து வருவதும் ஒரு முக்கியமான காரணம் ஆகும். அது இப்போது மட்டும் 120 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றும் கருத்துக் கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. ஏறக்குறைய 35 மொழிகளில் இந்த நிறுவனம் தொடர்களை டப் செய்து வெளியிடும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இந்தியாவில் இந்தி பேசுபவர்களுக்கு இணையாக தமிழ், தெலுங்கு பார்வையாளர்கள் இருப்பதன் காரணமாக புகழ் பெற்ற வெப் தொடர்களை தமிழ் மற்றும் தெலுங்கிலும் மொழிபெயர்த்து வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரின் அபரிமிதமான வெற்றியைத் தொடர்ந்து 2வது சீசனையும் தற்போது தயாரிக்கிறார்கள். ஆனால் அதில் தற்போது போல் தமிழ் மற்றும் தெலுங்கில் தாமதமாக டப் செய்யாமல் முதலிலிருந்தே தமிழ் மற்றும் தெலுங்கு ஆகியவற்றிலும் வெளியிட முடிவு செய்துள்ளனர்.