தடை செய்யப்பட்ட திரைப்படம்! விரும்பி பார்த்ததால் 14 வருட சிறைவாசம்!

0
88
Forbidden movie! 14 years imprisonment for wanting to!
Forbidden movie! 14 years imprisonment for wanting to!

தடை செய்யப்பட்ட திரைப்படம்! விரும்பி பார்த்ததால் 14 வருட சிறைவாசம்!

உலக நாடுகள் பலவற்றிலும் பலவிதமான நடைமுறைகள் பலவகைகளிலும் பின்பற்றி வருகின்றனர். ஒரு நாட்டில் இருப்பது போலவே எல்லா நாட்டிலும் இருக்கும் என்று எதிர்பார்ப்பது நடக்காது. அப்படி இருக்கும் பட்சத்தில் தென்கொரியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பிற எதிரி நாடுகளில் இருந்து வரும் அனைத்து கலாச்சார பொருட்களும்,  வடகொரியாவில் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது எல்லாம் ஒரு அபாய எச்சரிக்கை நிமித்தமாக தான் செய்கிறதே தவிர, வேறு எந்த எண்ணமும் இல்லை. அப்படி அதையும் மீறி சிலர் நடந்து கொள்ளும் போது அதற்கான தண்டனையை அனுபவிக்கின்றனர். தென் கொரியாவின் பிரபல சினிமாவான தி அங்கிள் என்ற திரைப்படம் ஒன்றை 14 வயது மாணவன் ஒருவன் விரும்பி பார்த்துள்ளான். வெறும் 5  நிமிடங்கள்தான் பார்த்துள்ளான்.

அதற்கு அவனுக்கு எப்படி தெரியுமா? தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு ஐந்து நிமிடங்கள் அந்த திரைப்படத்தை பார்ப்பதற்காக 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அந்த 14 வயது மாணவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. யாங்காங் மாகாணத்தைச் சேர்ந்த 14 வயது மாணவன் ஒருவன் ஹைசன் சிட்டியின் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி கூடத்தில்  சினிமாவை பார்த்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார்.

இது குறித்து உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்று சில தகவல்களை நமக்கு அளித்தது. அதன்படி தென் கொரிய திரைப்படங்கள் பதிவுகள், தொகுப்புகள், புத்தகங்கள், பாடல்கள், ஓவியங்கள், மற்றும் புகைப்படங்கள் என நேரடியாக பார்த்தாலோ அல்லது கேட்டாலோ உடன் வைத்திருப்போர் என பலருக்கும் ஐந்து வருடங்களுக்கும் மேல் அல்லது பதினைந்து ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை கிடைக்கும் என்பது இந்த நாட்டின் சட்டம் என்று தெரிவித்து உள்ளது.

இதற்கு முன்பு பிரபல நெட்ப்ளிக்ஸ் நிகழ்ச்சியான ஸ்க்விட் கேமைப் பார்த்த வடகொரியாவின் மாணவர்கள் பலரும் அப்போது கூட கடுமையான தண்டனை பெற்றதாக அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.