இலங்கை டி20 தொடர்! இந்திய அணியின் பெயர்பட்டியல் தயார்!

Photo of author

By Amutha

இலங்கை டி20 தொடர்! இந்திய அணியின் பெயர்பட்டியல் தயார்!

டி20 போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிரான டி20 போட்டிகள் நடைபெறஉள்ளன. இதற்காக இந்திய அணியில் விளையாட இருக்கும் வீரர்களின் பெயர்பட்டியல் தயாரிக்கப்பட்டு நேற்று வெளியிடப்பட்டது.

இந்திய அணியில் டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டு தொடரிலிருந்து, விராட்கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் இடம்பெறவில்லை.மேலும் இரு தொடர்களில் இருந்து ரிஷப் பந்த்க்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

டி20 ஆட்டங்கள் ஜனவரி 3, 5, 7 ஆகிய நாட்களில் மும்பை, புனே,, ராஜ்கோட்,ஆகிய இடங்களில் நடைபெற உள்ளன. அதுபோல ஜனவரி 10, 12, 15 ஆகிய நாட்களில் குவாஹாட்டி, கொல்கத்தா, திருவனந்தபுரம், ஆகிய இடங்களில் ஒருநாள் போட்டியும் நடைபெற உள்ளன.

டி20 அணி:

ஹார்திக் பாண்டியா ( கேப்டன்), இஷான் கிஷான், ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், சூர்யாகுமார் யாதவ்,( துணை கேப்டன்), தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், வாசிங்க்டன் சுந்தர், யுஜவேந்திர சஹால், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங்க், ஹர்சல் படேல், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி, முகேஷ் குமார்.

ஒருநாள் அணி:

ரோஹித் சர்மா( கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா( துணை கேப்டன்), வாசிங்க்டன் சுந்தர், யுஜவேந்திர ஷஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், முகமது சமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக் அர்ஷ்தீப் சிங்,