பெண்ணை அடித்து துன்புறுத்தி பாலியல் உறவு… இலங்கை வீரர் குணதிலக பற்றி வெளியான அடுத்த அதிர்ச்சி செய்தி!
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ குணதிலக ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியை சேர்ந்தவர் தனுஷ்கா குணதிலகா. இவர் இலங்கை அணிக்காக 47 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 46 டி20 போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பாக ஆடி வெற்றிகளை பெற்று தந்துள்ளார். உலகக்கோப்பை தொடரை விளையாடுவதற்காக ஆஸி சென்ற அணியில் இடம்பெற்றிருந்தார்.
ஆனால் காயம் காரணமாக தொடரின் பாதியிலேயே வெளியேறினார். ஆனால் இலங்கை திரும்பாத அவர் ஆஸ்திரேலியாவிலேயே இருந்துள்ளார். அங்கு அவர ஒரு பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொண்டதாக அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சம்மந்தப்பட்ட பெண்ணை கடந்த 2 ஆம் தேதி ரோஸ் பே நகரில் ஒரு தனியர் விடுதியில் சந்தித்து அந்த பெண் இடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டார் என்று அந்த பெண் புகார் செய்துள்ளார்.
இந்நிலையில் இப்போது அந்த பெண் கொடுத்த வாக்குமூலம் வெளியாகியுள்ளது. அதில் “உடலுறவு கொள்வதற்கு அந்த பெண்ணும் சம்மதம் இருந்ததாகவும், ஆனால் பாதுகாப்பற்ற முறையில் ஆணுறை பயன்படுத்தாமல் குணதிலக உடலுறவுக்கு முயன்ற போது, அவர் அதை மறுத்துள்ளார். இதனால் குணதிலக கோபமாகி, அந்த பெண்ணை அடித்து, கழுத்தை நெறித்து உடலுறவு கொண்டுள்ளார். இதனால் அந்த பெண்ணுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றங்களால் குணதிலகவுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.