பிரதமருடன் பூமி பூஜையில் பங்கேற்ற ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தலைவருக்கு கொரோனா தொற்று.!!

Photo of author

By Parthipan K

பிரதமருடன் பூமி பூஜையில் பங்கேற்ற ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தலைவருக்கு கொரோனா தொற்று.!!

Parthipan K

Updated on:

பிரதமர் மோடியுடன் அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜையில் கலந்துகொண்ட ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் மகந்த் நிர்த்தியா கோபால் தாஸ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகந்த் நிர்த்தியா கோபால் தாஸ் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது அவருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

குர்கோவனில் உள்ள மேதாந்தா மருத்துவனையில் மகந்த் நிர்த்தியா கோபால் தாஸுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு அவருக்கு அனைத்து விதமான உதவிகளை வழங்கவும், உயர்தரமான மருத்துவக் கவனிப்பு அளிக்கவும் முதல்வர் ஆதித்யநாத் மதுரா மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், முதல்வர் ஆதித்யநாத், மேதாந்தா மருத்துவமனையின் மருத்துவர் ட்ரீஹானை தொலைபேசியில் தொடர்புகொண்டு மகந்த் நிர்த்தியா கோபால் தாஸின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.