30 அடி தங்கத் தேரில் உலா வந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சாமி!!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வசந்த உற்சவத்தை முன்னிட்டு தங்கத் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர வசந்த உற்சவத்தை முன்னிட்டு தங்கத் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
நேற்று வசந்த உற்சவம் கோலாகலமாக தொடங்கிய நிலையில், 2ம் நாளான இன்று ஸ்ரீதேவி பூதேவியுடன் மலையப்ப சாமி 30 அடி தங்கத் தேரில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இந்த தங்க தேரினை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்தனர்.
ஆரத்திகள் எடுத்து பக்தி பரவசம் பொங்க தங்க தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இன்று பிற்பகல் வசந்த உற்சவத்தில் இரண்டாம் நாளான வசந்த மண்டபத்தில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற உள்ளது.