“அவரை ஓப்பனராக்கி வீணாக்கி விடாதீர்கள்…” முன்னாள் வீரர் கண்டனம்!
சூர்யகுமார் யாதவ்வை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கக் கூடாது என முன்னாள் வீரர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டி 20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்த ஒரு நாள் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து நடந்த இரண்டு டி 20 போட்டிகளில் முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றன. இதனால் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
இந்த போட்டிகளில் வழக்கமாக நான்காம் இடத்தில் ஆடும் சூர்யகுமார் யாதவ்வை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கினர். ஆனால் அந்த முடிவு பெரியளவில் பலனளிக்கவில்லை. இதுகுறித்து இப்போது விமர்சனங்கள் எழுந்துள்ளன. முகமது கைஃப் இதுபற்றி பேசும்போது “உண்மையிலேயே எனக்கு அந்த முடிவை ஏன் எடுத்தார்கள் என தெரியவில்லை.
இந்நிலையில் இப்போது முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ஸ்ரீகாந்த் “சூர்யகுமார் யாதவ்வை ஓப்பனராக இறக்கி அவரின் திறமையை வீணாக்காதீர்கள். அவர் நான்காம் இடத்தில் இறங்கி சிறப்பாக விளையாடுகிறார். உலகக்கோப்பையில் அவர் அந்த இடத்தில்தான் விளையாட வேண்டும். ஓப்பனராக இறக்கி அவரின் திறமையை வீணாக்க வேண்டாம். அணிக்கு ஓப்பனர் வேண்டும் என்றால் ஸ்ரேயாஸ் ஐயரை நீக்கிவிட்டு இஷான் கிஷானை அணியில் எடுத்துக்கொள்ள வேண்டும்” என கேப்டன் ரோஹித் ஷர்மாவை கண்டிக்கும் விதமாக பேசியுள்ளார்.