பாராளுமன்றம் ஒரு மாதம் முடக்கம்: நள்ளிரவில் அதிபரின் அதிரடி உத்தரவு

0
164

பாராளுமன்றம் ஒரு மாதம் முடக்கம்: நள்ளிரவில் அதிபரின் அதிரடி உத்தரவு

இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று அதிபராக பதவி ஏற்றுக் கொண்டவர் கோத்தபாயா ராஜபக்ச. இவர் பதவி ஏற்ற பின் முதல் முறையாக இந்தியாவிற்கு வருகை தந்து பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் அமைச்சர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் அதிபர் ஆனதும் தனது சகோதரரும், முன்னாள் அதிபருமான மஹிந்தா ராஜபக்சவை இலங்கையின் பிரதமராக நியமனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இலங்கை பாராளுமன்றம் நேற்று அதாவது டிசம்பர் 3 ஆம் தேதி கூட இருந்த நிலையில் திடீரென நள்ளிரவில் ஒரு மாதம் பாராளுமன்றத்தை முடக்கி வைப்பதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார். இதனால் இலங்கை பாராளுமன்றம் அடுத்த மாதம் ஜனவரி 3 ஆம் தேதி கூடும் என தெரிகிறது

இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின்படி பாராளுமன்றத்தை ஒத்தி வைக்கவோ முடக்கவோ அதிபருக்கு அதிகாரம் உண்டு என்பதால் அவர் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி இவ்வாறு முடக்கி வைத்துள்ளதாக இலங்கை அதிபர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

இந்த நிலையில் இலங்கையின் தமிழ் எம்பிக்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்றும், அவர்களுக்கு அமைச்சர் பதவி உள்ளிட்ட பதவிகள் வழங்க வேண்டும் என்று அதிபர் கோத்தபயவிடம் தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Previous articleதர்பார்’ இசை வெளியீடு தேதி அறிவிப்பு: ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்
Next articleகிரிக்கெட் விளையாட ஆசைப்படும் ஓட்டப்பந்தய வீரர்: எந்த அணியில் விளையாட ஆசை தெரியுமா?