விஜய் தேவரகொண்டா படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா!!! அவருக்கு பதிலாக மூன்றாவது முறையாக ஜோடி சேரும் விஜய் பட நடிகை!!!

0
36
#image_title

விஜய் தேவரகொண்டா படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா!!! அவருக்கு பதிலாக மூன்றாவது முறையாக ஜோடி சேரும் விஜய் பட நடிகை!!!

நடிகர் விஜய் தேவரகொண்டா அவர்கள் நடித்து வரும் 12வது திரைப்படமான விடி12 திரைப்படத்தில் இருந்து நடிகை ஸ்ரீ லீலா அவர்கள் விலகியதை அடுத்து நடிகர் விஜய் நடித்த திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் விடி12 திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குஷி திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தேவரகொண்டா அவர்கள் இயக்குநர் கவுதம் தின்னூரி இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் கவுதம் தின்னூரி அவர்கள் நடிகர் நானி நடித்த ஜெர்சி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்தின் பூஜை சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை ஸ்ரீலீலா அவர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் சில காரணங்களால் நடிகை ஸ்ரீலீலா அவர்கள் இந்த திரைப்படத்தில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. அதே சமயம் இந்த திரைப்படத்தில் நடிக்கும் புதிய நடிகை பற்றியும் தகவல்கள் கிடைத்துள்ளது.

அதன்படி நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கும் விடி12 திரைப்படத்தில் நடிகை ஸ்ரீலீலா அவர்களுக்கு பதிலாக நடிகை ராஷ்மிகா மந்தனா அவர்கள் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

நடிகை ராஷ்மிகா மந்தனா அவர்கள் ஏற்கனவே நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா அவர்கள் மூன்றாவது முறையாக நடிகர் விஜய் தேவரகொண்டா அவர்கள் நடிக்கவுள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தனா அவர்கள் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.