சென்னையில் டிஸ்னி மற்றும் யுனிவர்சல் ஸ்டுடியோ போன்ற தீம் பார்க்!!! தமிழக சுற்றுலாத்துறை அறிவிப்பு!!! 

0
33
#image_title

சென்னையில் டிஸ்னி மற்றும் யுனிவர்சல் ஸ்டுடியோ போன்ற தீம் பார்க்!!! தமிழக சுற்றுலாத்துறை அறிவிப்பு!!!

சென்னை மாவட்டத்திற்கு அருகே 100 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் அமெரிக்காவின் டிஸ்னி மற்றும் யுனிவர்சல் ஸ்டுடியோ போல தீம் பார்க் அமைக்கவுள்ளதாக தமிழக சுற்றுலாத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

தமிழகத்தில் தற்பொழுது வரை 37 தீம் பார்க்குகள் உள்ளது. இதில் மிகவும் பிரபலம் என்றால் சென்னையில் அமைந்துள்ள விஜிபி கிங்டம் எனப்படும் தீம் பார்க் தான். அதற்கு அடுத்தபடியாக வொண்டர்லா, பிளாக்தண்டர், கிஸ்கிந்தா, எம்ஜிஎம் தீம் பார்க் என்று பல தீம் பார்க்குகள் உள்ளது. இவை அனைத்தும் தனியாருக்கு சொந்தமானது. தற்பொழுது வெளியான அறிவிப்பின் மூலமாக அரசுக்கு சொந்தமான தீம் பார்க் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் முக. ஸ்டாலின் அவர்கள் இன்று(செப்டம்பர்26) சுற்றுலாத் துறையின் கொள்கை விளக்க குறிப்பை தாக்கல் செய்தார். அதில் சென்னைக்கு அருகே அரசு சார்பில் 100 ஏக்கர் பரப்பளவில் தீம் பார்க் அமைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா நாட்டில் உள்ள டிஸ்னி மற்றும் யுனாவர்சல் ஸ்டுடியோ போன்று சர்வதேச அளவிலான தீம் பார்க் அமைக்கவுள்ளதாகவும் தனியார் பங்களிப்புடன் அடுத்த 5 ஆண்டுகளில் இந்த தீம் பார்க் நடைமுறைக்கு வரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

மேலும் ராட்சத ராட்டினங்கள், விளையாட்டு அரங்குகள், நீர் விளையாட்டுகள் பான்ற பல பொழுதுபோக்கு அம்சங்களுடன் இந்த சர்வதேச அளவிலான தீம் பார்க் அமையவுள்ளது.