ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் மீது சாணி வீச்சு! கரூர் மாவட்டத்தில் திடீர் பரபரப்பு!

Photo of author

By Rupa

ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் மீது சாணி வீச்சு! கரூர் மாவட்டத்தில் திடீர் பரபரப்பு!

Rupa

Updated on:

Stalin and Udhayanithi Shani on Stalin! Sudden excitement in Karur district!

ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் மீது சாணி வீச்சு! கரூர் மாவட்டத்தில் திடீர் பரபரப்பு!

கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையம் என்ற பகுதியில் திமுக கட்சி அலுவலகம் ஒன்று உள்ளது. அந்த அலுவலகத்தில் முன் இருந்த கொடி மற்றும் அங்கிருந்த புகைப்பட பலகை அனைத்தையும் மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தில் நள்ளிரவில் மர்ம நபர்கள் அங்குள்ள கொடியை நார் நாராக கிழித்து ரோட்டில் எரிந்துள்ளனர். அத்தோடு அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் கருணாநிதி ஆகியோர் படம் பொருந்தி வைக்கப்பட்ட பலகை மீது சாணி வீசி நாசம் செய்திருந்தனர்.

இதனைக் கண்ட அந்த ஊரைசேர்ந்த திமுக வை சேர்ந்தவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். மேலும் இவ்வாறு செய்த மர்ம நபர்கள் யார் என்றும் அடையாளம் காண்பித்தனர். இது குறித்து வேலாயுதம் பாளையத்தை சேர்ந்த போலீசார் அந்த மர்ம நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து மேற்கொண்ட விசாரணை செய்து வருகின்றனர். இவ்வாறு திமுக அலுவலகத்தை சூறையாடிய மர்ம நபர்களான பிரதீப், சுகுந்தன் ஆகியோரை போலீசார் கைது செய்ததையடுத்து பாஜகவை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதி பதற்றத்தில் காணப்பட்டது.