அவர் விரக்தியில் உளறுகிறார்! ஸ்டாலின் கிண்டலடித்த தமிழகத்தின் முக்கிய நபர்!

Photo of author

By Sakthi

கொளத்தூர் தேர்தல் வழக்கு சம்பந்தமாக பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பதிலளித்து இருக்கின்றார்.

இதைப்பற்றி தெரிவித்துள்ள அவர், என்னுடைய கொளத்தூர் தேர்தல் வழக்கு சம்பந்தமாக முதல்வர் பேசியது அவர் விரக்தியில் இருக்கிறார் என்பதை காட்டுகின்றது. உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த ஒரு வழக்கை சுட்டிக்காட்டி முதல்வர் பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது.

உச்சநீதிமன்றத்தில் நிலுவையில், இருக்கும் மேல்முறையீடு வழக்கு சம்பந்தமான தீர்ப்பு வழங்குவது போல முதல்வர் பேசி இருக்கின்றார். எப்போதும் நிறைவேறவே இயலாத தன்னுடைய அரசியல் பேராசையை முதல்வர் வெளிப்படுத்தி இருக்கின்றார், என்று தெரிவித்திருக்கின்றார் ஸ்டாலின்.

சென்ற 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக வின் தற்போதைய தலைவர் மு க ஸ்டாலின் வெற்றி பெற்றார்.

இந்த தேர்தலில் அவரை எதிர்த்து நின்ற அதிமுகவின் சைதை துரைசாமி ஸ்டாலினுடைய வெற்றி செல்லாது, என்று அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பானது சென்ற 2017ம் வருடம் அறிவிக்கப்பட்டது.

அந்த தீர்ப்பில், ஸ்டாலினுடைய வெற்றி செல்லுபடியாகும் என்று நீதிபதி வேணுகோபால் தெரிவித்து இந்த வழக்கை முடித்து வைத்தார்.

ஆனாலும் இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சைதை துரைசாமி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கில் ஸ்டாலினுக்கும் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கும் நிலையில், கடந்த மூன்று வருட காலமாக இந்த வழக்கு விசாரணைக்கு வராமல் இருக்கின்றது.