திமுகவின் மரபுகளை தவிடுபொடியாக்கிய ஸ்டாலின்! மரபுகளை மீறி தேசிய கொடி ஏற்றம்

Photo of author

By Parthipan K

தமிழக முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் நினைவால் கட்டப்பட்டுள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக மரபுகளை மீறி தற்போதுள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தேசியக்கொடியினை நேற்று ஏற்றி உள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று தேசிய கொடியை ஏற்றுவது வழக்கம். ஆனால் அங்கு திமுகவின் தலைவர்கள் அதனை ஏற்றுவதில்லை. தேசியக்கொடியினை அமைப்புச் செயலாளர் அல்லது துணை பொதுச்செயலாளர் ஆகியோரில் யாராவது ஏற்றுவது தான் திமுகவின் மரபாக இருந்து வந்தது.

மேலும் அறிஞர் அண்ணாவும், கலைஞர் கருணாநிதியும் முதல்வராக இருந்தபோது கோட்டையில் தான் கொடி ஏற்றுவார்கள். அப்போது இந்த மரபு பின்பற்றப்படாது.

இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி தான் சுதந்திர தினத்தன்று தேசியக்கொடியை ஏற்றுவார் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அதனை எல்லாம் தவிடுபொடியாக்கி விட்டு திமுக தலைவர் மு.கஸ்டாலினே தேசிய கொடியினை ஏற்றிவைத்தார்.

இதனை அரசியல் விமர்சகர்கள் மற்றும் மூத்த பத்திரிக்கையாளர்கள் என அரசியல் வட்டாரங்களில், திமுகவின் மரபு உடைக்கப்பட்டது ஒரு பேசுபொருளாக இருந்து வருகிறது.

இதனைப்பற்றி திமுகவின் முன்னணி நிர்வாகிகளிடம் கேட்டபோது, இது கட்சியில் எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை எனவும், கட்சியின் தலைவரே தேசியக் கொடி ஏற்றுவது சிறப்புமிக்கதாக இருப்பதாகவும், மேலும் இது குறித்து எந்த பின்னணியும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.