கூடும் கிரைம் ரேட் உட்ச்க்கட்ட கோபத்தில் ஸ்டாலின்!! இது எல்லாமே உங்களால் தான்.. 18 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்!!
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் க்ரைம் ரேட்டின் அளவு சொல்ல முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளது. அந்த வகையில் தற்பொழுது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரமடுத்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் கொலை செய்யப்பட்டது பெருமளவில் பேசப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து கடலூர் முன்னாள் பாமக நிர்வாக தலைவராக இருந்தவரையும் சரமாரியாக வெட்டியுள்ளனர். இவ்வாறு தினந்தோறும் கொலை கொள்ளை என்ற கிரைம் ரேட்டிங் அளவு எண்ணிலடங்காமல் உள்ளது.
ஒவ்வொரு முறை இவ்வாறான குற்றங்கள் நிகழும் போதும் அது சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகளை மாற்றுவதையே திமுக தனது வேலையாக வைத்துள்ளது. குறிப்பாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய் விவகாரம் நடைபெற்ற பொழுது அம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரை மாற்றினார். அதேபோல தற்பொழுது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை அடுத்து 18 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றியுள்ளனர். நேற்று தலைமையக்கத்தில் சட்ட ஒழுங்கு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் சென்னை மாநகர சட்ட ஒழுங்கு ஆணையராக அஸ்ரா கர்க் இருந்து வந்த நிலையில் தற்பொழுது நரேந்திரன் நாயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் எண்ணற்ற குற்றவியல் அசம்பாவிதங்கள் நடந்துள்ளதால் அது குறித்து ஆலோசனை செய்துள்ளனர். திமுக ஆட்சி அமைந்ததால் சட்ட ஒழுங்கு சீர்கேடு அடைந்து விட்டது என அனைத்து மக்களும் பேச ஆரம்பித்துவிட்டதையடுத்து சட்டமன்ற தேர்தல் வருவதற்குள் இதனையெல்லாம் சரி கட்ட வேண்டுமென்று ஆணையிட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். எந்த இடத்தில் தவறு நடக்கின்றது என்பதை கண்டறிந்து உடனடியாக அனைத்து துறைகளிலும் மாற்றம் கொண்டு வர வேண்டும் என முதல்வர் திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.