தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்த ஸ்டாலின் – வருத்தம் தெரிவித்தார்!

Photo of author

By Parthipan K

தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்த ஸ்டாலின் – வருத்தம் தெரிவித்தார்!

Parthipan K

கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாய் தவுசாயம்மாள் காலமாணார். அதிமுக கட்சியின் மூத்த தலைவர்களும், பிரமுகர்களும், கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் என அனைவரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு தங்களின் வருத்தங்களையும், ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்தனர்.

பிரதமர் மோடி, மத்திய துறை அமைச்சர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்தனர். மேலும் முதலமைச்சரின் தாய் தவுசாயம்மாளின் இறுதி சடங்கு முடிந்து சில நாட்களே ஆன நிலையில், சென்னையில் பசுமை வழி சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அதிகாரபூர்வ இல்லத்திற்க்கு திமுக கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்றார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்ற ஸ்டாலின், அங்கே வைக்கப்பட்டிருந்த தவுசாயம்மாள் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதன்பின் எடப்பாடி பழனிசாமியிடம் தவுசாயம்மாளுக்கு என்ன ஆயிற்று என்பதை கேட்டறிந்தார்.

மேலும் ஸ்டாலின் அவர்கள் தனது வருத்தங்களையும், ஆழ்ந்த இரங்கல்களையும் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்தார். அப்போது அதிமுக கட்சியின் தொண்டர்கள், அமைச்சர்கள், ஊர்மக்கள் எடப்பாடி பழனிசாமி உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.