அதிமுக வை கதிகலங்க வைக்கும் ஸ்டாலின்!! எடுக்கும் அதிரடி முடிவுகள்!! லிஸ்ட் ரெடி !!

Photo of author

By Preethi

அதிமுக வை கதிகலங்க வைக்கும் ஸ்டாலின்!! எடுக்கும் அதிரடி முடிவுகள்!! லிஸ்ட் ரெடி !!

ஸ்டாலின் எடுக்கும் முடிவுகளை கண்டு திமுகவினரே ஆச்சரியத்தில் உள்ளனர். அதிமுகவினர் மீதான புகார்களின் விசாரணை குறித்து மீண்டும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் பிரச்சாரங்களில் போது முக ஸ்டாலின், குறிப்பிட்ட 5 தொகுதிகளில் மட்டும் நேரம் ஒதிக்கி அதிக நேரம் பேசினார். அப்போது திமுகவுக்கு ஓட்டுப்போடுங்கள் என்று அவர் கேட்க இல்லை. ஏன் என்றால், அந்த தொகுதிகளில் பேசும் போது முழுக்க மாஜிக்களின் ஊழல்களை பற்றிதான் பேசினார். “திமுக ஆட்சி அமைத்தால், ஊழல் ஃபைல்களை தூசி தட்டி எடுக்கும், என் முதல் வேலையை இவர்களுக்கு தண்டனை பெற்று தருவது தான்.” என்று ஸ்டாலின் உறுதிபட சொன்னார்.

பின், ஊழல் புகார்களை விசாரிப்பதற்காகவே சிறப்பு குழுவையும் அமைத்தார். சேலம், கோவை, புதுக்கோட்டை, விருதுநகர், மதுரை ஆகிய தொகுதிகளின் பிரச்சாரங்களில் முதல்வர் ஸ்டாலின் என்னவெல்லம் பேசி இருந்தாரோ, அவைகள்தான் இப்போது நடைமுறைக்கு வரும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஊழல் லிஸ்டில், ராஜேந்திர பாலாஜியின் பெயர்தான் முதலில் உள்ளதாக சொல்லப்பட்டது.இதேபோல், விஜயபாஸ்கர் மீதான புகார்களும் தூசி தட்டி எடுக்கப்பட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் சேலம் எடப்பாடி பழனிசாமி, தேனி ஓபிஎஸ், கொங்கு மண்டலம் வேலுமணி போன்றோரும் அடுத்தடுத்த லிஸ்டில் உள்ளனர்.

இதுவரை இந்த லிஸ்டில் உள்ளவர்களின் புகார்கள் தொடர்பாக ஓரளவு விவரங்கள் சேகரிக்கப்பட்டுவிட்டன. ஆனால், அவர்கள் மீது தற்போது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் நினைக்கிறார் என தெரிகிறது. ஏன் என்றால், இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டால், கைது ஆவார்கள்.ஆனால், ஓரிரு மாதங்களிலேயே பெயிலில் வெளியில் வந்துவிடக்கூடும்.ஆகவே, வெளியில் வர முடியாத அளவுக்கு வலுவான ஆதாரங்களை மேலும் திரட்ட வேண்டும், அந்த ஆதாரங்களை மக்கள் சபையில் கொண்டு வந்து நிரூபிக்க வேண்டும், அதன்பின்னர், ஊழல் தொடர்பானோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதுதான் இதற்கெல்லாம் நிஜமான தீர்வாக இருக்கும் என்று ஸ்டாலின் நம்புகிறார்.